ஹஜ் பயணத்துக்கான குலுக்கல் தேதி மே 24க்கு மாற்றம்

15/05/2011 17:46

ஹஜ் புனிதப் பயணத்துக்கான குலுக்கல் தேதி மாற்றப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மாநில ஹஜ் குழு தெரிவித்துள்ளது.

 

 

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

 

 

நிர்வாக காரணங்களால், மே 17-ம் தேதி நடைபெற இருந்த ஹஜ் பயணிகளை தேர்வு செய்வதற்கான குலுக்கல், மே 24-ம் தேதி நடைபெறும். அன்றைய தினம், காலை 10 மணியளவில், சென்னை புதுக் கல்லூரி வளாகத்தில் உள்ள ஆணைக்கார் அப்துல் சுக்கூர் கலையரங்கத்தில் குலுக்கல் நடைபெறும்.

 

 

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

 

dinamani.com