ஹஜ் புனித யாத்திரை: இந்தியர் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியது

30/10/2011 09:05

இந்தியாவிலிருந்து சவூதி அரேபியாவிற்கு ஹஜ் புனித யாத்திரை செல்பவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டில் ஒரு லட்சத்தை தாண்டியது.

 

இப்போது வரை 97,405 இந்தியர்கள் மெக்காவிலும், 3,628 இந்தியர்கள் மெதினாவிலும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

 

இதுவரை 46 புனித பயணிகள் இறந்துள்ளதாகவும், இதில் 39 பேர் இந்திய ஹஜ் கமிட்டியின் மூலமும், 7 பேர் தனியார் மையத்தின் மூலமாக புனிதப்பயணம் சென்றுள்ளதாகவும், ஜெட்டாவில் உள்ள இந்திய தூதரக அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அதிகபட்சமாக தில்லியிலிருந்து 31,389 பேரும், லக்னெüவிலிருந்து 12,485 பேரும் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

dinamani.com