ஹஜ் பெருநாள் மற்றும் குர்பானி 2010

18/11/2010 15:15

இந்த வருடம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஹஜ் பெருநாள் பிறை அடிப்படையில் 18-11-2010 என அறிவித்ததன் படி புதுவலசை TNTJ மர்கஸ் திடலில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இன்று காலை 7-45 மணியளவில் ஹஜ் பெருநாள் தொழுகை நடைபெற்றது. அதில் சகோ. பக்கீர் முஹம்மது அவர்கள் உரை நிகழ்த்தினார்கள். அதில் ஏராளமான ஆண்களும் பெண்களும் கலந்துகொண்டனர்.

 

அதைத் தொடர்ந்து 21 பங்குதாரர்களைக் கொண்டு 3 மாடு குர்பானிக்காக அறுக்கப்பட்டு சுமார் 120க்கும் அதிகமான குடும்பங்களுக்கு குர்பானிக் கரி வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...