ஹஜ் யாத்திரிகளுக்கு மானியம் வழங்குவது சட்ட விரோதமானது அல்ல - உச்சநீதிமன்றம் தீர்ப்பு

29/01/2011 19:28

ஹஜ் மற்றும் பிற யாத்ரீகர்களுக்கு அரசு வழங்கும் மானியம் சட்டவிரோதமானதல்ல என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஹஜ் யாத்ரீகர்களுக்கு அரசு அளிக்கும் மானியம் சட்டவிரோதமானது என்றும், எனவே அதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரி உச்ச நீதிமன்றத்தில் இந்து மதத்தைச் சேர்ந்த ஒருவர் மனு தாக்கல் செய்திருந்தார்.

அதில் தாம் ஒரு இந்து என்றும், தாம் செலுத்தும் நேரடி மற்றும் மறைமுக வரிப்பணம் முஸ்லீம்களுக்கு ஹஜ் யாத்திரைக்கான மானியமாக அளிக்கப்படுவதாக குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மார்க்கண்தேய கட்ஜு மற்றும் கியான் சுதா ஆகியோரடங்கிய அமர்வு, ஹஜ் மற்றும் பிற யாத்ரீகர்களுக்கு அரசு வழங்கும் மானியம் சட்டவிரோதமானதல்ல என்றும், பொதுமக்களின் பணத்தில் மிகச் சிறிய தொகை மானியமாக அளிக்கப்படுவது சட்டவிரோதம் ஆகாது என்றும் தீர்ப்பளித்தனர்.

 

தமிழ் வெப்துனியா 29-01-2011