‎வேலைவாய்ப்பு: ஐ.டி- பீ.பி.ஓ. துறைகள் முன்னிலை

09/12/2010 13:37

இந்தியாவில் கடந்த ஓராண்டு காலத்தில் தகவல் தொழில்நுட்பம் (ஐ.டி) மற்றும் பீ.பி.ஓ. துறைகள் ஆகியவையே அதிகளவில் வேலைவாய்ப்புகளை வழங்கியுள்ளன. இது நாட்டில் உருவான மொத்த வேலைவாய்ப்புகளில் 66 சதவீதமாகும்.

செப்டம்பர் வரை முடிவடைந்த காலகட்டத்தில் இந்தத் துறைகளைச் சேர்ந்த தனியார்  நிறுவனங்கள் 8.54 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகளை வழங்கியுள்ளன. இது நாட்டின் அனைத்து துறைகளிலும் உருவான மொத்த வேலை வாய்ப்புகளில் 66 சதவீதம்.

இந்தத் துறைகளுக்கு அடுத்தபடியாக ஜவுளித் துறையில் 1.52 லட்சம் பேருக்கும், இரும்பு-எஃகுத் துறையில் 1.37 லட்சம் பேருக்கும், ஆட்டோமொபைல் துறையில் 1.10 லட்சம் பேருக்கும்ம், நகைகள் தயாரிப்பு-விற்பனைத் துறையில் 93,000 பேருக்கும் வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. oneindia.in