அதிக அளவில் தண்ணீர் குடித்தால் ஆபத்து: நிபுணர் எச்சரிக்கை

18/07/2011 09:26

அதிக அளவில் தண்ணீர் குடித்தால் சிறுநீரகம் பாதிப்பு ஏற்படாது, உடல் எடை குறையும், நினைவுதிறன் அதிகரிக்கும் என்று ஏற்கனவே மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆனால் அதிகளவு ண்ணீர் குடிப்பது ஆபத்து என்று இங்கிலாந்தை சேர்ந்த உடலியல் நிபுணர் ஜி.பி. மர்க்கரட் தெரிவித்துள்ளார்.
 
இதுபற்றி அவர் கூறியதாவது:-
 
உடலுக்கு எவ்வளவு தண்ணீர் தேவையோ அந்தஅளவுக்கு மட்டுமே குடிக்க வேண்டும். பொதுவாக ஒரு நாளைக்கு 1 முதல் 2 லிட்டர் தண்ணீர் வரை தேவைப்படும். அந்த அளவுக்கு குடித்தால் போதுமானது. உடலுக்கு தண்ணீர் தேவைப்படும் போது தாகம் எடுக்கும் அதற்கு தகுந்தார்போல் தண்ணீர் குடிக்க வேண்டும்.
 
தேவைக்கு மேல் தண்ணீரை திணிக்கக்கூடாது. அப்படி செய்தால் உடல் உறுப்புகள் கூடுதல் பணிகளை செய்ய வேண்டி இருக்கும் இதனால் உடலுக்கு பாதிப்பு ஏற்படும். உடலில் கலோரியை எரிக்கவும், நீர்ச்சத்தை அதிகரிக்கவும் தண்ணீர் தேவைப்படும். அதன் தேவைக்கு ஏற்றார்போல் உடலில் தண்ணீர் இருக்க வேண்டும்.
 
உடலில்நீர்ச்சத்து குறைந்தால் தலைவலி ஏற்படும். எனவே தலைவலி இருந்தால் தண்ணீர் குடிப்பது நல்லது. பாட்டிலில் அடைந்து வைக்கப்படும் தண்ணீர் ஆரோக்கியமானவை அல்ல.

maalaimalar.com