அமெரிக்காவுக்கு எதிராக பாகிஸ்தான் திரும்புமா?

16/05/2011 10:48

சில நாட்களுக்கு முன் பாகிஸ்தான் நாட்டில் வைத்து ஒசாமா கொள்ளப்பட்டதாக செய்திகள் வெளிவந்தது. அதன் பின் பாகிஸ்தானுக்கு எதிராக அமெரிக்காவும் அமெரிக்காவுக்கு எதிராக பாகிஸ்தானும் பல்வேறு அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர்.

 

பாகிஸ்தான் ஒசாமாவை பாதுகாத்து உதவி செய்து வந்ததாக அமெரிக்கா குற்றம் சாட்டியது அதற்கு பதிலடியாக அமெரிக்காதான் ஒசாமாவை வளர்த்தது என்று பாகிஸ்தான் கூறியது. இந்நிலையில் பாகிஸ்தானில் அமெரிக்காவுக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஒசாமா சம்மந்தமான செய்திகளை பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ எஸ் ஐ உடன் பகிர்ந்து கொள்ளவில்லை என்பதை அமெரிக்கா வெளிப்படையாகவே தெறிவித்தது அதன் விளைவாக இன்று அமெரிக்காவின் சி ஐ ஏ உடன் உளவு தகவல்களை பகிர்ந்து கொள்வதில்லை என பாகிஸ்தான் தெறிவித்துள்ளது. மேலும் பாகிஸ்தானில் அமெரிக்க படைகள் நடத்திவரும் தாலிபான்களுக்கு எதிரான தாக்குதல்களுக்கும் பாகிஸ்தான் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி பாகிஸ்தான் அரசுக்குத் தெறியாமல் அமெரிக்காவின் ஹெலிகாப்டர்கள் பறந்தால் சுட்டு வீழ்த்தப்படும் என அறிவித்துள்ளது. பின்லேடன் குறித்த ஆவனங்களை இன்னும் அமெரிக்கா வெளியிடாமல் இருக்கும் நிலையில் அதைத் தொடர்ந்து இருநாட்டு உறவுகளில் விரிசல் ஏற்படும் வாய்ப்பு அதிகரித்து வருகிறது.

 

இதற்கிடையே பாகிஸ்தானுடனான உறவுகளையும் உதவிகளையும் துண்டிக்கவேண்டும் என ஒரு தரப்பும் அமெரிக்காவுடனான உறவுகளை துண்டிக்கவேண்டும் என மறுதரப்பினருக்கும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெறிவிக்கின்றன.

 

ஆனால் பாகிஸ்தானியர்கள் உட்பட 6 பேர் தாலிபான்களுக்கு நிதியுதவி வழங்கியதாக அடுத்த  குற்றச்சாட்டை இன்று வெளியிட்டுள்ளது அமெரிக்கா. தாலிபான் மற்றும் அல்கொய்தாவுக்கு நிதி வழங்குபவர்களை கண்காணித்து வருவதாக சொல்லும் அமெரிக்கா இன்று 3 அமெரிக்க இமாம்கள் மீதும் 3 பாகிஸ்தானியர்கள் மீதும் குற்றம் சாட்டியுள்ளது. அதில் அமெரிக்காவின் ப்ளோரிடா மாகானத்தைச் சேர்ந்த நபர் ஹபீஸ்கான், அவரது மகன்கள் இர்பான்கான் மற்றும் இசார்கான் ஆகியோர் என அறிவிக்கப்பட்டுள்ளது இவர்கள் மூவரும் இமாம்கள் ஆவர். பாகிஸ்தானியர்களில் அல்ரகுமான், அலாம் செப், அமீனாகான் ஆகியோர் ஆவர்.

 

இந்நிலையில் பாகிஸ்தானில் ஆயுத பயிற்சி மையத்திற்கு அருகே நடத்தப்பட்ட தாக்குதலில் சுமார் 80 பேர் பலியாகி உள்ள நிலையில் இன்று இரண்டாவது முறையாக சவுதி தூதரகம் முன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பின்லேடன் கொலைக்குப் பழி வாங்கும் நடவடிக்கை என்று இந்த குண்டு வெடிப்புகளுக்கு தலைப்பிட்டு செய்திகள் வெளிவருகின்றன. மேலும் அமெரிக்கா பின்லேடன் சம்மந்தமாக நேற்று ஒரு புதிய தகவலை வெளியிட்டுள்ளது. பின்லேடன் தங்கியிருந்த வீட்டில் இருந்து ஆபாச வீடியோக்கள் கிடைத்துள்ளதாகவும் பின்லேடன் அதை பார்க்கும் பழக்கம் உள்ளவர் என்ற கோணத்தில் அமெரிக்கா செய்திகளை வெளியிட்டுள்ளது.