அயோத்தி விவகாரம்: கோர்ட்டுக்கு வெளியே தீர்வு காண முயற்சி எடுங்கள் பிரதமர் மன்மோகன்சிங்குக்கு ஜாவீத் ஹபீப் கோரிக்கை

29/08/2010 10:29

அகில இந்திய பாபர் மசூதி நடவடிக்கை குழு தலைவர் ஜாவீத் ஹபீப் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர், ``இந்து, முஸ்லிம்கள் நன்மை கருதி, அயோத்தியில் ராமர் கோவில் கட்டவும், பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் மீண்டும் மசூதி கட்டவும், கோர்ட்டுக்கு வெளியே தீர்வு காண நடவடிக்கை எடுங்கள்'' என்று குறிப்பிட்டுள்ளார். 

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அலகாபாத் ஐகோர்ட்டு விரைவில் தீர்ப்பு சொல்ல இருக்கிறது. அதற்கு முன்னதாக இந்த விஷயத்தில் தீர்வு காண்பது நல்லது. அதற்காக அத்வானி மற்றும் தேசிய தலைவர்களை ஒன்றிணைக்க நீங்களும், மத்திய அரசுப் பிரதிநிதியும் முயற்சி மேற்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்'' என்றும் அந்த கடிதத்தில் அவர் தெரிவித்து உள்ளார்.