அரபி அப்பா தர்ஹாவில் நாடார் தெருவைச் சார்ந்தவர் கந்தூரி

20/10/2010 14:21

நமதூரில் நாம் விசாரித்த வரைக்கும் யார் என்றே தெறியாத அரபி (மொழி) அப்பா (பெரியவர்) என்ற பெயரில் உள்ள தர்ஹாவில் முஸ்லிம்களே கந்தூரி கொடுக்வோ கொடியேற்றவோ அல்லது மௌலீது ஓதவோ இஸ்லாம் அனுமதிக்கவில்லை. ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன் நமதூர் நாடார் தெருவைச் சேர்ந்த ஒரு சகோதரர் அரபி அப்பா தர்ஹாவில் கந்தூரி கொடுக்க கேட்டுக் கொண்டதன் பேரில் நமதூர் ஜமாஅத்தார்கள், பேஸ் இமாம்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் ஹாஜி பெருமக்களெல்லாம் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பாத்திஹா ஓதி ஆமீன் போட்டுவிட்டு வந்துள்ளனர்.

ஒரு முஸ்லிமல்லாதவரைப் பெருத்தவரை அரபி அப்பா, அவர்களின் ஆயிரத்தில் ஒருவர். ஆனால் முஸ்லிம்களைப் பொருத்தவரை அல்லாஹ்வை தவிர யார் பெயரிலும் நேர்ச்சை செய்வதோ அறுத்து பலியிடுவதோ கூடாது என்று திருமறைக் குர்ஆன் கூறுகிறது.

பிரார்தனை, நேர்ச்சை, அறுத்து பலியிடுதல் மற்றும் சத்தியம் செய்தல் ஆகிய நான்கும் இஸ்லத்தின் பார்வையில் அல்லாஹ்வுக்கு செய்யவேண்டிய வணக்கங்களாகும். நல்லடியார்கள் பற்றி அல்லாஹ் கூறுவதை பாருங்கள்.

(நபியே!) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால் ''நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன், பிரார்த்தனை  செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன், அவர்கள் என்னிடமே(பிரார்த்தித்துக்) கேட்கட்டும், என்னை நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்"" என்று கூறுவீராக. 2.186

எனவே, உம் இறைவனுக்கு நீர் தொழுது, குர்பானியும் (அறுத்து பலி) கொடுப்பீராக. 108.2

அவர்கள் தாம் (தங்கள்) நேர்ச்சைகளை நிறை வேற்றி வந்தார்கள் (கியாம) நாளை அவர்கள் அஞ்சி வந்தார்கள். அதன் தீங்கு (எங்கும்) பரவியிருக்கும். 76.7

கடந்த வருடம் தர்ஹா சம்மந்தமாக நமதூர் பேஸ் இமாம் அஹமது அமீன் அவர்களிடம் பேசும் சந்தர்ப்பம் கிடைத்தது. அப்போது அவரிடம் பிரார்தனை வணக்கம் என்று அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் சொல்கிறார்களே ஆனால் நீங்கள் தர்ஹாக்களில் சென்று பாத்திஹா ஓதுகிறீர்கள் உங்களால் மக்களும் அந்த தவறை செய்கிறார்களே என்று கேட்கப்பட்டது. அதற்க்கு அவர் சொன்ன பதில் என்ன தெறியுமா?

”நாங்கள் அல்லாஹ்விடம் தான் பிரார்தனை செய்கிறோம், அரபி அப்பாவிடம் பிரார்தனை செய்யக் கூடாது, மக்களில் சிலர் அரபிஅப்பா தர்ஹாவில் வைத்து பிரார்தனை செய்ததால்தான் எனக்கு நல்லது நடக்கும் என்று சொல்கிறார்கள் அவர்களின் நம்பிக்கையை நான் தவறு என்று எப்படி சொல்ல முடியும், அல்லாஹ்தான் ரிஸ்க் தருகிறான் என்பது அவர்களுக்கு தெறியவில்லை என்று சொன்னார்”.

நாம் மீண்டும் குறுக்கிட்டு ”நீங்கள் அரபி அப்பாவிடம் பிரார்தனை செய்யவில்லை என்று கூறுகிறீர்கள் ஆனால் மக்கள் அரபி அப்பாவிடம் பிரார்தனை செய்கின்றனர் அதற்க்கு நீங்கள் தான் காரணம் நீங்கள் அங்கு செல்வதினால் தான் அவர்களும் அங்கு செல்கின்றனர், அதே நேரத்தில் மக்களின் அரபிஅப்பா பற்றிய நம்பிக்கை பற்றிச் சொன்னீர்கள் இதை நீங்கள் பகிரங்கமாக சொல்வது உங்கள் மீது கடமை இல்லையா? என்று கேட்டோம்.

அதற்க்கு அவர் ”மக்கள் நம்பினால் அதற்க்கு நான் எப்படி பொருப்பாக முடியும்? என்று பொருப்பற்ற முறையில் பதில் சொன்னார், பின் நாங்கள் அங்கு ஜியாரத்துக்குத் தான் செல்கிறோம் கபுர் ஜியாரத் இஸ்லாத்தில் அனுமதிக்கப் பட்டுள்ளதா இல்லையா? என்றார் (கபுர் ஜியாரத் என்பது பொது மையவாடிக்க செல்வது என்றும் தனி கபுர்களுக்கு புனிதம் கருதிச் செல்வதில்லை என்றும்  அங்கு சென்று தம்முடைய தேவை குறித்து பிரார்தனை செய்ய எந்த ஆதாரமும் இல்லை என்றும் கபுராலிகளுக்காக பிரார்தனை செய்வது மட்டுமே அனுமதி உள்ளது என்றும் விளக்கம் தரப்பட்டது), பின் நாங்கள் மக்களுக்கு சொல்லாமல் இல்லை, சொல்லிக் கொண்டுதான் இருக்கிறோம்,  மக்களின் நம்பிக்கையில் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று முடிவெடுக்க கூடாது கொஞ்சம் கொஞ்சமாகத்தான் சொல்ல வேண்டும் என்று ஒரு பதிலைக் கூறி முடித்துக் கொள்ள முயற்சித்தார்.

இவர்களின் இது போன்ற பொறுப்பற்ற தன்மையினால் மக்களில் மறுமை வாழ்வு பாழாகிக் கொண்டு இருக்கிறது. அல்லாஹ்தான் நம் மக்களுக்கு நேர் வழி காட்ட வேண்டும்.