அரபி ஒலியுல்லா பள்ளிகளின் ஆண்டுவிழா நிகழ்ச்சி

05/03/2010 16:20

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

 

 5-3-2010

அரபி ஒலியுல்லா பள்ளிகளின் ஆண்டுவிழா நிகழ்ச்சி

அரபி ஒலியுல்லா உயர்நிலைப்பள்ளி மற்றும் தொடக்கப்பள்ளிகளின் 120 ஆவது விளையாட்டு விழா மற்றும் ஆண்டு விழா நேற்று காலை துவங்கியது. முஸ்லிம் தர்மபரிபாலன சபை நிர்வாகிகள், பள்ளிகளின் தாளாலர் சகோ. லியாக்கத் அலி, தாசின் அரக்கட்டளை பெறுப்பாளர் சகோ. முஹம்மது அலி  மற்றும் ஜமாஅத் உறுப்பினர்களின் முன்னிலையில் ஜமாஅத் துணை செயலாலர் நிஜாமுதீன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்கள்.

உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சகோ. சிக்கந்தர் சீதக்காதி மரைக்காயர் அவர்களும் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் சகோ. ஜெயச்சந்திரன் அவர்களும் ஆண்டறிக்கை வாசித்தனர். எஸ்.எஸ்.ஏ. திட்ட மேலாலர் சகோ. ஜெய்னுல் ஆபிதீன் ஆவர்களும், மண்டபம் எஸ்.எஸ்.ஏ. ஆய்வாலர் சகோ. ரமேஸ் மற்றும் பள்ளிகளின் தாளாலர் சகோ. லியாக்கத் அலி அவர்களும் வாழ்த்துரை வழங்கினர்.

கடந்த எஸ்.எஸ்.எல்.சி பொதுத் தேர்வில் 100 சதவிகித தேற்ச்சிக்கு தழிழக அரசு வழங்கிய சான்றிதழ்களும் கல்வித்துறை சார்பில் வழங்கப்பட்ட சான்றிதழ்களும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டது. பின் விளையாட்டில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. பின் சகோ. அழகேசன் அவர்களின் நன்றியுரையுடன் விழா நிறைவடைந்தது.


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

 

 28-2-2010

அரபி ஒலியுல்லா பள்ளிகளின் 120 ஆவது ஆண்டுவிழா

வரும் 4ம் தேதி காலை விளையாட்டுவிழா என்றும் மாலையில் ஆண்டுவிழாவும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.