அல்லாஹ்வை நம்புதல் 1

15/09/2010 10:06

அல்லாஹ் எங்கே இருக்கிறான்?

அல்லாஹ் எங்கே இருக்கின்றான் என்று உன்னிடம் யாராவது கேட்டால் நீ அல்லாஹ் வானத்திலுள்ள அர்ஷில் எவ்வாறு அமர்வது அவனுக்குத் தகுதியானதோ அந்த விதத்தில் அமர்ந்திருக்கிறான் என்று கூறவேண்டும். அல்லாஹ் அர்ஷில் அமர்ந்துள்ளான் என்பதற்கு அதிகமான திருக்குர்ஆன் வசனங்கள் சான்றாக உள்ளன. பின்வரும் வசனங்களி­ருந்தும் ஹதீஸி­ருந்தும் அல்லாஹ் வானத்திலுள்ள அர்ஷில் உள்ளான் என்பதை நாம் விளங்கிக் கொள்ள முடியும்.

வானத்தில் உள்ளவன் பூமியில் உங்களைப் புதையச் செய்வதில் பயமற்று இருக்கிறீர்களா? அப்போது (பூமி) நடுங்கும், (அல்குர்ஆன் 67:16.)
அளவற்ற அருளாளன் அர்ஷின் மீது அமர்ந்தான். (அல்குர்ஆன் 20:5).

நபி(ஸல்) அவர்கள் ஒரு அடிமைப் பெண்ணிடம் அல்லாஹ் எங்கே இருக்கின்றான்? என்று கேட்டார்கள். அப்பெண், அல்லாஹ் வானத்தி­ருக்கிறான் என்று கூறினாள். நான் யார்? எனக் கேட்டார்கள். நீங்கள் அல்லாஹ்வின் தூதர் என்று கூறினாள். நபி(ஸல்) அவர்கள் அவளது எஜமானனிடம் இவள் முஃமினான பெண்மணியாவாள். இவளை உரிமை விட்டுவிடு என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : முஆவியா பின் ஹகம் (ர­)
நூல் : முஸ்­ம் (836)

அல்லாஹ் தூணிலும் இருக்கின்றான் துரும்பிலும் இருக்கின்றான் என்று கூறுவது கூடாது. இவ்வாறு கூறுவது இஸ்ôத்திற்கு மாற்றமான கொள்கையாகும். அல்லாஹ் தான் அர்ஷில் இருப்பதாகக் கூறிய பிறகு அதற்கு மாற்றமாக நம்பிக்கை கொள்வது கூடாது
 
அல்லாஹ் நம்முடன் இருக்கிறானா?

நாம் அல்லாஹ் அர்ஷில் எவ்வாறு அமர்வது அவனுக்குத் தகுதியானதோ அவ்விதத்தில் அமர்ந்திருக்கிறான் எனக்கண்டோம். ஆனால் பின்வரும் வசனங்களில்
 
அல்லாஹ் பொறுமையாளர்களுடனும் (2 53) இறையச்சமுடையவர்களுடனும் ( 2 194 ) இறைநம்பிக்கையாளர்களுடனும் ( 8  19)  நன்மையான காரியங்கள் செய்பவர்களுடனும் (16 127)  மேலும் 5 12  57 4 ஆகிய வசனங்களில் அனைத்து மக்களுடனும் அல்லாஹ் இருப்பதாகக் கூறுகிறான்.

அல்லாஹ் நம்முடன் இருக்கிறான் என்பதின் கருத்து நம்மை கண்காணித்துக் கொண்டிருக்கிறான். நம்முடைய ஒவ்வொரு செயலையும் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பதாகும். இதனை பின்வரும் வசனத்தின் மூலம் நாம் விளங்கிக் கொள்ள முடியும். அல்லாஹ் மூஸா ( அலை) அவர்களையும் ஹாரூன் (அலை) அவர்கதளையும் ஃபிர்அவ்னிடம் சென்று சத்தியத்தைக் கூறுமாறு அனுப்பும் போது
 
”அஞ்சாதீர்கள்! நான் பார்த்துக் கொண்டும் கேட்டுக் கொண்டும் உங்களுடன் இருக்கிறேன்” என்று அவன் கூறினான். (அல்குர்ஆன் 20:46)
அதாவது இறைவன் நாம் செய்பவைகளைப் பார்ப்பதின் மூலமும் நாம் சொல்பவைகளை கேட்பதின் மூலமும் நம்முடன் இருக்கிறான்.
இறைவன் நம்முடன் இருக்கிறான் என்பதன் கருத்து அவன் நம்மைக் கண்காணித்து நாம் செய்யும் செயல்களை பாதுகாத்து வைத்துக் கொள்வான் என்பதாகும்.

அர்ஷ்

அர்ஷ் என்பது அவனுடைய மிகப் பிரம்மாண்டமான ஆசனமாகும்.
”ஏழு வானங்களுக்கும் அதிபதி, மகத்தான அர்ஷுக்கும் அதிபதி யார்?” எனக் கேட்பீராக! (அல்குர்ஆன் 23:86)

அவனது ஆசனம் வானங்களையும், பூமியையும் உள்ளடக்கும். (அல்குர்ஆன் 2:255)

அந்நாளில் (முஹம்மதே!) உமது இறைவனின் அர்ஷை தம் மீது எட்டுப் பேர் (வானவர்கள்) சுமப்பார்கள். (அல்குர்ஆன் 69:17)
அல்லாஹ்வின் தோற்றம்

அல்லாஹ்விற்கு உருவம் இருக்கின்றது
 
இறைவன் உருவமற்றவன் என்று கூறுவது இஸ்லாத்திற்கு மாற்றமான கொள்கையாகும். அவனுடைய தோற்றத்தை மறுமையில் நல்லடியார்கள் காண்பார்கள்.
 
அந்நாளில் சில முகங்கள் மலர்ந்து இருக்கும்.தமது இறைவனைப் பார்த்துக் கொண்டிருக்கும். (அல்குர்ஆன் 75:22,23)

மறுமையில் அல்லாஹ் இறைநம்பிக்கையாளர்களுக்கு அவர்கள் அவனைப் பற்றி எண்ணி வைத்திருந்த தோற்றம் அல்லாது வேறொரு தோற்றத்தில் அவர்களிடம் முதல் தடவையாக வந்து நானே உங்கள் இறைவன் என்று கூறுவான்.
அறிவிப்பவர் :  அபூஸயீத் அல்குத்ரீ(ர­)
நூல் : புகாரீ (7439)

இறைவனுக்கு நாமாக உருவத்தைக் கற்பிக்கக் கூடாது.

அல்லாஹ் கூறுகிறான் : அவனைப் போல் எதுவும் இல்லை. அவன் செவியுறுபவன்; பார்ப்பவன். (அல்குர்ஆன் 42:11)

அல்லாஹ்வைப் பார்க்கமுடியுமா?

இவ்வுலகில் யாரும் அல்லாஹ்வைப் காண முடியாது

அல்லாஹ் கூறுகிறான் : அவனைக் கண்கள் பார்க்காது. அவனோ கண்களைப் பார்க்கிறான். (அல்குர்ஆன் 6:103)
 
நாம் வாக்களித்த இடத்துக்கு மூஸா வந்து, அவரிடம் அவரது இறைவன் பேசிய போது ”என் இறைவா! (உன்னை) எனக்குக் காட்டுவாயாக! நான் உன்னைப் பார்க்க வேண்டும்” எனக் கூறினார். அதற்கு (இறைவன்) ”என்னை நீர் பார்க்கவே முடியாது. எனினும் அந்த மலையைப் பார்ப்பீராக! அது அதற்குரிய இடத்தில் நிலையாக இருந்தால் நீர் என்னைப் பார்க்கலாம்” என்று கூறினான். அவரது இறைவன் அந்த மலைக்குக் காட்சி தந்த போது அதைத் தூளாக்கினான். மூஸா மூர்ச்சித்து விழுந்தார். அவர் தெளிவடைந்த போது ”நீ தூயவன். உன்னிடம் மன்னிப்புக் கேட்கிறேன். நம்பிக்கை கொண்டோரில் நான் முதலாமவனாக இருக்கிறேன்” எனக் கூறினார் (அல்குர்ஆன் 7:143)

நபி(ஸல்) அவர்களிடம் நீங்கள் உங்கள் இறைவனைப் பார்த்ததுண்டா? என்று கேட்கப்பட்டபோது அவனோ ஒளியானவன் நான் அவனை எப்படிப் பார்க்கமுடியும் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூதர் (ர­)
நூல் : முஸ்­ம் (261)

மறுமையில் நல்லடியார்கள் இறைவனைக் காண்பார்கள்.

அந்நாளில் சில முகங்கள் மலர்ந்து இருக்கும். தமது இறைவனைப் பார்த்துக் கொண்டிருக்கும். (அல்குர்ஆன் 75:22,23)
நபி(ஸல்) அவர்கள் காலத்தில் மக்கள் சிலர் அல்லாஹ்வின்தூதரே! மறுமை நாளில் நாங்கள் எங்கள் இறைவனைக் காண்போமா? என்று கேட்டனர். நபி(ஸல்) அவர்கள் ஆம்! காண்பீர்கள். மேகமே இல்லாத நண்பகல் வெளிச்சத்தில் சூரியனைப் பார்க்க ஒருவரையொருவர் முண்டியடிப்பீர்களா? என்று கேட்டார்கள். மக்கள் இல்லை என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள் மேகமே இல்லாத பவுர்ணமி இரவின் வெளிச்சத்தில் நிலவினைப் பார்ப்பதற்கு ஒருவரை ஒருவர் முண்டியடிப்பீர்களா? என்று கேட்டனர். மக்கள் (அப்போதும்) இல்லை என்று பதிலளித்தார்கள். நபி(ஸல்) அவர்கள் இவ்விரண்டில் ஒன்றைப் பார்க்க நீங்கள் முண்டியடித்துச் செல்லாதது போலவே மறுமை நாளில் கண்ணியமும் மகத்துவமும் மிக்க அல்லாஹ்வைக் காணவும் முண்டியடிக்க மாட்டீர்கள்.
அறிவிப்பவர் : அபூஸயீத் அல்குத்ரீ(ர­)
நூல் : புகாரீ (4581)

காஃபிர்கள் மறுமையில் இறைவனைப் பார்ப்பதை விட்டும் திரையிடப்படுவார்கள்.

அந்நாளில் அவர்கள் தமது இறைவனை விட்டும் தடுக்கப்படுவார்கள். (அல்குர்ஆன் 83:15)
அழகிய திருநாமங்கள்

அல்லாஹ்வுக்கு அழகிய பெயர்கள் உள்ளன. அவற்றின் மூலமே அவனிடம் பிரார்த்தியுங்கள்! அவனது பெயர்களில் திரித்துக் கூறுவோரை விட்டு விடுங்கள்! அவர்கள்
”அல்லாஹ் என்று அழையுங்கள்! அல்லது ரஹ்மான் என்று அழையுங்கள்! நீங்கள் எப்படி அழைத்த போதும் அவ னுக்கு அழகிய பெயர்கள் உள்ளன” என்று (முஹம்மதே!) கூறுவீராக! உமது பிரார்த் தனையைச் சப்தமிட்டும் செய்யாதீர்! மெது வாகவும் செய்யாதீர்! இவ்விரண்டுக்கும் இடைப்பட்ட வழியைத் தேடுவீராக! (அல்குர்ஆன் 17:110)

www.kadayanalluraqsa.com