ஆசிரியர் தேர்வில் முஸ்லிம் இடஒதுக்கீட்டில் குளறுபடி

09/08/2010 10:27

ராமநாதபுரம்: ஆசிரியர் தேர்வு வாரியத்தில் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டில் பாரபட்சத்துடன் செயல் பட்டுள்ளதால் ,ஒதுக்கீடு சதவீதப்படி இடம் கிடைக்காமல் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்தில் கணித ஆசிரியர் பணியிடங்கள் 1382, ஆங்கிலம் 1625, இயற்பியல் 857 பணியிடங்கள் அறிவிக்கப் பட் டது. ஆனால் கடந்த ஜூலை ஒன்பதில் தேர்வாணையம் கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், விலங்கியல் ஆகிய பாடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர் பட்டியலை வெளியிட்டது. ஜூலை 27ல் ஆங்கில பாடத்திற்கு தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர் பட்டியலை வெளியிட்டது. இதில் கணித பாடத்திற்கு 1382க்கு பதிலாக 1319 , இயற்பியல் பாடத்திற்கு 857க்கு பதிலாக 845, ஆங்கில பாடத்திற்கு 1625க்கு பதிலாக 1603 பணியிடங்கள் மட்டுமே வெளியிடப்பட்டன. முஸ்லிம்களுக்கான 3.5 சதவீதம் ஒதுக்கீடு செய்வதற்கு பதிலாக குறைத்து ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டோர் புகார் கூறி உள்ளனர். அவர்கள் கூறியதாவது: கணித பாடத்தில் 1319 பணியிடங்களில் முஸ்லிம்கள் இடஒதுக்கீடு 3.5 சதவீதப்படி 46பேரை நியமித்திருக்க வேண்டும். ஆனால் 37 பணியிடங்கள் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளது. இதே போல் இயற்பியலில் ஐந்து, ஆங்கிலத்தில் 11 என 25 இடங்கள் ஒதுக் கப்படாமல் குளறுபடி செய்துள்ளனர். இதனால் பணி கிடைக்கும் என காத்திருந்த முஸ்லிம் கள் ஏமாற்றமடைந்துள்ளனர். இதை பரிசீலனை செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு பணி வாய்ப்பு கிடைக்க வேண்டும் ,என்றனர்.

-https://www.dinamalar.com/district_detail.asp?id=57722