ஆப்கனில் முன்கூட்டியே படை விலகலால் எஞ்சிய வீரர்களுக்கு ஆபத்து: எம்.பி.க்கள் கவலை

18/07/2011 10:44

ஆப்கானிஸ்தானில் நேட்டோ படைகள் முகாமிட்டு உள்ளன. இந்த படை துருப்புகளில் பிரிட்டன் ராணுவ வீரர்களும் உள்ளனர்.

 

வருகிற 2014ஆம் ஆண்டு கால கட்டத்தில் அனைத்து பிரிட்டன் துருப்புகளும் நாடு திரும்ப திட்டமிடப்பட்டு உள்ளது. முன்னதாக அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 500 வீரர்கள் நாடு திரும்புவார்கள் என பிரதமர் டேவிட் கமரூன் கூறியிருந்தார்.

 

இதன் மூலம் ஆப்கானிஸ்தானில் பிரிட்டன் வீரர்கள் எண்ணிக்கை 9 ஆயிரமாக குறையும். பிரிட்டன் வீரர்களை குறைப்பதால் ஆப்கானிஸ்தானில் உள்ள இதர பிரிட்டன் துருப்புகள் பலவீனம் அடைந்துவிடும். இதனால் ஆபத்து ஏற்படும் என பிரிட்டன் எம்.பி.க்கள் கவலை தெரிவித்து உள்ளனர்.

 

வருகிற 2014ஆம் ஆண்டு காலத்தில் முழு பாதுகாப்பு பொறுப்பையும் ஆப்கானிஸ்தான் வசம் ஒப்படைத்து விட்டு நேட்டோ படைகள் நாடு திரும்ப திட்டமிட்டு உள்ளன.

 

ஆப்கானிஸ்தானில் உள்ள பிரிட்டன் வீரர்களுக்கு அனைத்து உதவிகளும் அளிக்கப்பட வேண்டும். அதே போன்று உரிய கருவிகள், வசதிகள் செய்து தரப்பட வேண்டும் என எம்.பி.க்கள் வலியுறுத்தி உள்ளனர்.

 

பாதுகாப்பு துறை அமைச்சகத்தின் நடவடிக்கைகளால் ஆப்கானிஸ்தானில் உள்ள பிரிட்டன் வீரர்கள் தங்கள் உயிருக்காக போராடும் சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது என்றும் குற்றம் சாட்டினர்.

Newsonews.com