ஆஸ்திரேலியாவில் புர்காவிற்க்கு தடைவிதிக்கும் மசோதா தாக்கல்

20/09/2010 20:18

The Muslim community rally against the proposed ban of the Niqab.பிரேசிலில் முகத்திரைக்கு தடைவிதித்ததைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவின் நியு சவுத் வேல் மாகாணத்தில் அமைச்சர் ஃப்ரட் நிலே முஸ்லிம் பெண்கள் அணியும் புர்கா என்ற ஹிஜாப் ஆடை அணிய தடைவிதிக்கும் மசோதா ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மசோதா நிறைவேற வில்லை ஆனாலும். அந்த நடவடிக்கைக்கு ஆஸ்திரேலிய முஸ்லிம் பெண்களும் ஆண்களும் கடும் கண்டனம் தெறிவித்துள்ளனர். இன்று பெற்றி பார்க் என்ற இடத்தில் நடைபெற்ற கண்டனப் பேரணியில் ஆயிரக்கனக்கான ஆண்களும் பெண்களும் களந்துகொண்டு தங்களது கண்டனத்தை தெறிவித்தனர்.

நேற்று சிட்னியில் நடைபெற்ற பேரணியில் பேசிய ஹிஸ்புர் தஹ்ரிர் இயக்கத்தின் உறுப்பினர் சகோதரி பாத்திமா அர்ததி ”இஸ்லாமிய சிந்தனைகள் அதைப் பின்பற்றும் முஸ்லிம்களுக்கு மதிப்பிற்க்கு உறியது என்றும், முஸ்லிம் பெண்கள் பற்றி பாடம்  மேற்கத்திய மதச்சார்பின்மை கொள்கை வாதிகளுக்கோ முஸ்லிமல்லாதவர்களுக்கோ எந்த தகுதியும் இல்லை என்றும் கடுமையாக சாடியுள்ளார்.

மேற்கத்திய கலாச்சாரப் பெண்கள் இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டு வருவது பண்மடங்கு அதிகரித்து வரும் நிலையில் இது போன்ற பொய்யான பிரச்சாரங்களால் இஸ்லாத்திற்க்கு எதிராக கருத்துக்களை விதைக்க முற்ப்படுவதாக குற்றம் சாட்டியுள்ளார். இஸ்லாத்தை வாழ்வியலாக ஏற்றுக் கொண்டு அதன் மேலான சட்டங்களை விட்டு கிழான மேற்கத்திய கொள்கைக்கு திரும்ப மாட்டோம் என்றும் கூறினார்.

தனது லேகம்பா பேரணியில் இஸ்லாமிய ஆடையை பெண்கள் அணிவது சுதந்திரமாக தேர்வு செய்யும் உரிமையை பரிக்கும் விதமாக இருக்கிறது என்ற குற்றச்சாட்டை மையமாக வைத்து தடை விதிக்க கோரியுள்ளதால் இங்கு தேர்ந்தெடுக்கும் உரிமையை மையமாக வைத்து எதிர்க்க முற்ப்படுகின்றனர் அப்படியானால் அதே தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தின் அடிப்படையில் நிர்வானமாக ஆடையை அணிபவர்களைப் போல் முஸ்லிம்களும் அணிய வேண்டும் என்று நினைக்கின்றனர். ஆனால் ஒரு முஸ்லிம் பெண்ணாக இருந்து கொண்டு எங்களால் இஸ்லாம் அனுமதித்த ஆடையைத் தவிர அப்படிப்பட்ட அரை நிர்வானமான  ஆடையை அணிய முடியாது ஏனென்றால் இந்த கட்டளை  அல்லாஹ்விடமிருந்து வந்தது, வேறு எந்த தனிமனிதனின் கட்டளையும் அல்ல என்றார்.

பெண்களுக்கு இரண்டு நிலைதான் இருக்கிறது ஒன்று மதச்சார்பற்ற நெறிமுறை அது பெண்களின் கண்ணியத்தையும், மதிப்பையும் கவரவத்தையும் கெடுத்து வியாபரப் பொருட்களைப் போல் பெண்கள் நடத்தப் படுவது. இரண்டாவது நிலைதான் இஸ்லாம் இது பெண்களுக்கு மதிப்பையும், கண்ணியத்தையும், கவரவத்தையும் ஏற்படுத்தித் தருவதில் இணையற்றது என்றும் கூறினார்.

இந்த மசோதா நிறைவேறாமல் போனாலும் அடுத்த வாரத்திலோ, மாதத்திலே அல்லது அடுத்த வருடத்திலோ இதை நிறைவேற்ற முயற்சி மேற்கொள்ளப் படடும் என்றார். மொத்தம் 5 பேச்சாளர்களில் அடதியும் ஒருவர்.

நிலேயின் ஆஸ்திரேலியா இறையான்மைக்கு எதிரான இந்த மசோதா இனவாத சக்திகளுக்கு ஆஸ்திரேலிய மண்ணில் வாய்ப்பு ஏற்ப்படுத்தி தரும்படியானது என்றும் முஸ்லிம் பெண்களுக்கு எதிராக செயல்பட நினைப்பவர்களுக்கு தூண்டு கோலாவும் அமைந்துவிடும் என்று உம்மு ஜமாலுதீன் கூறினார்.

நான் என்னுடைய அழகை நான் தேர்ந்தெடுத்துக் கொண்டவரிடம் மட்டுமே வெளிக்காட்ட வேண்டும் என நினைக்கிறேன் என்றும் சகோதரி உம்மு ஜமாலுதீன் கூறினார்.

இந்தப் பேரணியில் சுமார் 2000 ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர்.

https://www.smh.com.au/nsw/its-unaustralian--rally-condemns-push-to-ban-burqa-20100919-15hy0.html