இந்தத் தேர்தலில் புதுவலசை வாக்காளர்களின் மனநிலை என்ன?

17/04/2011 07:26

கடந்த 13ம் தேதி தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இதில் திமுக சார்பில் சு.ப. தங்கவேலன் அவர்களும், தேமுதிக சார்பில் முஜிபு ரஹ்மான் அவர்களும், இந்தி ஜனநாயக கட்சி சார்பில் பவுலின் தார்சிஸ் அவர்களும், பா.ஜ.க சார்பில் மகாலிங்கம் அவர்களும் போட்டியிட்டனர். இந்த தொகுதியில் 22 வருடங்களுக்குப் பிறகு திமுக நிற்கிறது. காங்கிரஸின் கோட்டையென கருதப்பட்ட இந்தத் தொகுதியில் போதுமான வளர்சித்திட்டங்கள் செய்யப்படவில்லை என்பது பரவலாக தெறிகிறது.

 

திருவாடானை தொகுதியில்  ஏழை-எளிய மக்களின்   குறைகளை தீர்ப்பேன்;  தே.மு.தி.க. வேட்பாளர் முஜிபுர்ரகுமான் பிரசாரம்

நமதூரைப் பொருத்தவரை, புதிதாக திருவாடானை தொகுதியில் இணைக்கப்பட்ட கிராமம், மக்கள் திருவாடானை பகுதியில் சென்று தமது சட்டமன்ற உறுப்பினரை பார்க்கனுமா? என்று பரவலாக இத்தொகுதியில் இணைக்கப்பட்டதற்கு மக்கள் அதிருப்தியில் இருந்தனர். இந்தத் தேர்தலில் இரண்டு முக்கிய வேட்பாளர்களில் பெரும்பாலான நடுநிலையாளர்கள் தேமுதிக வேட்பாளர் முஜிபு ரஹ்மானை (படத்தில் கும்மிடு போட்டு நிற்பவர்) ஆதரித்திருப்பதாக தெறிகிறது குறிப்பாக 4 ஆவது வார்டு மக்களைச் சொல்லலாம். வெளிநாடுகளில் இருக்கும் நமதூர் மக்களும் தம் வீட்டாரை முஸ்லிம் வேட்பாளருக்கு ஓட்டளிக்க சொன்னதாக தெறிகிறது எனவே மற்ற பகுதியிலும் இவருக்கு கனிசமான வாக்குகள் கிடைத்திருக்க வாய்ப்பு இருக்கிறது. மற்ற ஒரு அமைப்பினரும் திமுகவுக்கு ஆதரவு என்று சொல்லிவிட்டு முஜிபு ரஹ்மானை நமதூரில் ஆதரித்துள்ளனர். நமதூரில் ததஜ தேர்தல் வேலைகளில் அதிக கவனம் செழுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

மற்ற பகுதியில் பரவலாக கூட்டணி ஓட்டுக்கள் இரண்டு வேட்பாளர்களுக்கும் பாஜகவுக்கு ஒரு சில ஓட்டுகளும் விழுந்திருக்க வாய்ப்பு உள்ளது. வரும் மே 13 வரை பொருத்திருப்போம் யார் இத்தொகுதியில் வெற்றி பெறப்போவது என்பதை பார்ப்போம்.