இந்தியாவில் கருக்கலைப்பு குறைந்து வருகிறது

15/09/2010 15:48

இந்தியாவில் பெண்கள் கருக்கலைப்பு செய்து கொள்வது சட்டப் பூர்வ உரிமையாக்கப்பட்டுள்ளது. ஆரோக்கியம் இல்லாத, குறைந்த வளர்ச்சிக் கொண்ட குழந்தைகள் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டால் அவற்றை கலைக்க அனுமதிக்கப்படுகிறது.
 
இந்தியாவில் கடந்த 2005-ம் ஆண்டு சுமார் 7 லட்சத்து 25 ஆயிரம் பெண்கள் கருகலைப்பு செய்து கொண்டனர். 2006-ம் ஆண்டு இது 7 லட்சத்து 21 ஆயிரமாக குறைந்தது.
 
2007-ம் ஆண்டு கருக் கலைப்பு செய்யும் பெண்கள் எண்ணிக்கை 6 லட்சத்து 82 ஆயிரமாக இருந்தது. 2008-ல் அது 6 லட்சத்து 41 ஆயிரமாக சரிந்தது.
 
தற்போது நடப்பாண்டில் குறை வளர்ச்சி குழந்தை களை தவிர்க்கும் கருக்கலைப்பில் ஈடுபட்ட பெண்களின் எண்ணிக்கை மேலும் கணிசமாக குறைந்துள்ளது.
 
இந்தியாவில் உத்தரபிரதேசத்தில் தான் அதிக கருக்கலைப்பு நடந்துள்ளது. தமிழ்நாடு 2-வது இடத்தில் உள்ளது. ஒரிசா, அசாம், மராட்டியம், மேற்கு வங்கம், அரியானா, டெல்லி, ராஜஸ் தான், குஜராத், பீகார் மாநிலங்கள் அடுத்த இடங்களில் இருக்கின்றன.
 
உலக அளவிலும் குறை பிரசவத்தை தடுக்கும் கருக்கலைப்புகள் குறைந்த படி உள்ளன. ஆனால் கருக் கலைப்பு செய்து கொள்ளும் பெண்கள் உயிரிழக்கும் பரிதாபம் குறையவில்லை. பாதுகாப்பற்ற முறையில் கருவை கலைக்கும் பெண்களில் ஆண்டு தோறும் சுமார் 70 ஆயிரம் பெண்கள் உயிரிழப்பதாக சர்வதேச சர்வே மூலம் தெரிய வந்துள்ளது.

Maalaimalar