இந்தோனேசியாவின் சுமத்ரா தீவுகள் அருகே கடும் நிலநடுக்கம்

15/09/2012 01:00

 

ஜகார்த்தா: இந்தோனேசியாவின் சுமத்ரா தீவு அருகே இன்று கடும் நிலநடுக்கம் உணரப்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.2 அலகுகளாக இந்த நிலநடுக்கம் பதிவாகி இருந்தது.

சுமத்ரா தீவின் மேற்குப் பகுதியில் மென்ட்வாய் தீவுப் பகுதியில் கடலுக்கு கீழே 20 கிலோ மீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டிருக்கிறது. படாங் மற்றும் பெங்குலு ஆகிய நகரங்களிலும் நிலநடுக்கத்தை பொதுமக்கள் உணர்ந்தனர். இதனால் அலுவலகங்கள் மற்றும் வீடுகளை விட்டு அலறி அடித்து வெளியே ஓடினர்.

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்பட்டதாக இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு தொடர்பான் உடனடித் தகவல்களும் வெளிவரவில்லை.

 

A strong undersea earthquake has hit parts of western Indonesia, but no tsunami warning was issued and there have been no immediate reports of damage or casualties.