இஸ்ரத் ஜஹான் போலி என்கௌண்டர் - 20 காவல்துறையினர் மீது சி.பி.ஐ வழக்குப் பதிவு!

18/12/2011 11:23

alt

2004 ம் ஆண்டு நடத்தப்பட்ட இஸ்ரத் ஜஹான் என்கௌண்டர் போலியானது என்றும் என்கௌண்டர் செய்யப் பட்டதாகச் சொல்லப் படும் நாளுக்கு முன்னரே இஸ்ரத் ஜஹான் கொல்லப் பட்டு விட்டார் என்றும் சிறப்புப் புலனாய்வுக் குழு குஜராத் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. சிறப்புப் புலானாய்வுக் குழு அறிக்கையை அடுத்து இவ்வழக்கை சி.பி.ஐ வசம் ஒப்படைத்தது குஜராத் உயர்நீதிமன்றம்.

இந்நிலையில் இஸ்ரத் ஜஹான் போலி என்கௌன்டரில் தொடர்புடைய 20 காவல்துறையினர் மீது இன்று சி.பி.ஐ முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்துள்ளது. முன்னாள் குற்றப் பிரிவு இணை ஆணையர் பி.பி.பாண்டே, பணியிடை நீக்கம் செய்யப் பட்டுள்ள டி.ஐ.ஜி டி.ஜி வன்சாரா, முன்னாள் உதவி ஆணையர் சிங்கால், என்.கே.அமின் உள்ளிட்ட 20 காவல்துறையினர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப் பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இதில் வன்சாரா மற்றும் அமின் ஆகிய இருவரும் சொராபுதீன் போலி என்கௌண்டர் மற்றும் அவரது மனைவி கௌசர் பி கொல்லப் பட்ட வழக்கில் சிறையில் உள்ளது குறிப்பிடத் தக்கது.

inneram.com