இஸ்லாத்திற்க்கு எதிரான நடவடிக்கைகளுக்கு கண்டனம் - ஐ.நா.வில் முஸ்லிம் நாடுகள்

29/09/2010 10:34

கடந்த சில மாதங்களாகவே அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இஸ்லாத்திற்கு எதிரான நடவடிக்கைகளிலும் முஸ்லிம்களுக்கு எதிராக கருத்துகளும் நிலவி வருகிறது. இந்நிலையில் ஈரான் பிரதமர் அஹமது நிஜாத் செப்டம்பர் 11 தாக்குதலுக்கு அமெரிக்காவே காரணம் எனறு சில நாட்களுக்கு முன் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்நிலையில் இஸ்லாமியர்களால் உலகுக்கே பெரும் அச்சுறுத்தல் உருவாகியுள்ளதாக ஐரோப்பிய நாடுகள் கூறிவருவதை கண்டித்த இஸ்லாமிய நாடுகள் இதை ஐ.நா தலையிட்டு தடுத்து நிருத்தவேண்டும் என வழியுறுத்தியது. அமெரிக்காவில குர்ஆன் எறிப்புக்கு அழைப்பு விடுத்த சர்ச் நியூயார்க் நகரில் அமைய உள்ள பள்ளிவாசலுக்கு எழுந்துள்ள எதிர்ப்பு மற்றும் இஸ்லாமிய சின்னங்களுக்க எதிரான ஐரோப்பிய நாடுகளின் செயல்கள் குறித்தும் இஸ்லாமிய நாடுகள் தமது கருத்துக்களை பதிவு செய்துள்ளது. 

சூடான் மற்றும் பாலஸ்தீன் - இஸ்ரேலிய பிரச்சனை சம்மந்தமான விவாதத்தில் கத்தார் மன்னர் ஹமாத் பின் கலிபா அல் தானி பேசுகையில் இஸ்லத்தையும் தீவிரவாதத்தையும் சம்மந்தப்படுத்தி பேசுவதற்க்கு கடும் கண்டனம் தெறிவித்தார். அதோடு மட்டும் அல்லாமல் அமெரிக்காவின் ”தீவிரவாதத்துக்கு எதிரான போர்” என்ற முழக்கத்தில் இஸ்லாமிய நாடுகள் மீது தாக்குதல் நடத்திவருவதாக குற்றம் சாட்டினார். மேலும் தீவிரவாதம் முஸ்லிமகளால் மட்டும் என்பது போல் மாற்றப்படுவதற்க்கு எதிர்ப்பு தெறிவித்ததேடு இச் செயல் வரலாற்று அநீதி என்றும சமீபத்திய வரலாற்றை இவர்கள் மறுக்க முற்படுகிறார்கள் எனறும் கடுமையாக சாடினார்.

அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகளில் அநீதியான முறையில் கடும்போக்கு 20ஆம் நூற்றாண்டின் இறுதியில் நிலவிய நேரத்தில் அதை யாரும் அமெரிக்கா தீவிரவாதம் என்றோ, ஐரோப்பிய தீவிரவாதம் என்றோ அல்லது ஆசிய தீவிரவாதம் என்றோ தனிமைப்படுத்த வில்லை, அவை எல்லாம் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் காரணங்களாகவும் ஏன் கொள்கை காரணமாவும்தான் பார்க்கப்பட்டது. எந்த குறிப்பிட்ட மதத்தையோ நாட்டையோ சார்ந்ததாக பார்க்கப்படவில்லை என்றார். 

அதைத் தொடர்ந்து எகிப்து வெறியுறவுத்துறை அமைச்சர் அஹமது அபுல் கேய்த் பேசுகையில் மேற்கத்திய நடுகள் தொடர்ந்து வெருக்கத்தக்க வகையில் இஸ்லத்தை சீண்டிப்பார்க்கும் நடவடிக்கையை கண்டித்தார். முஸ்லிம் உலகுடன் மேற்கத்திய நாடுகள் பொதுவாகவே மோதல் போக்குடன் நடந்துகொள்வதாகவும் குற்றம் சாட்டினார். இந்த நடவடிக்கைகள் யாருக்கு உதவியாக இருக்கோ இல்லையோ இருபுறமும் உள்ள தீவிர போக்குடையவர்களுக்கும், தற்க்காப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்குமே என்றும் அவை உலக அமைதிக்கும் பாதுகாப்புக்கும் உகந்ததல்ல எனறும் கூறினார்.

இது போன்ற சமூக மற்றும் மதரீதியான பிரச்சனைகள் நிகழாமல் தடுக்க முயற்ச்சி மேற்கொள்ள மேற்கத்திய நாடுகளுக்கும் அதன் அரசுகளுக்கும் கேய்த் அழைப்புவிடுத்தார்.

ஜோர்டான் மன்னர் அப்துல்லா, பரவிவரும் தவறான புறிதல்களை எதிர்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மலேசிய பிரதமர் நிஜாப் ரஜாக், 1.5 மில்லின் முஸ்லிம்களின் எதிர்ப்பை மேற்கத்திய நாடுகள் பெற்றுள்ளது என்றும் இது முஸ்லிம் உலகிற்க்கும் மேற்கத்திய உலகிற்க்கும் இடையே பிரிவினையை ஏற்படுத்துமோ என்ற அச்சத்தை ஏற்படுத்துவதாக இருப்பதாகவும் கூறினார்கள்.

https://www.khaleejtimes.com/DisplayArticle09.asp?xfile=data%2Finternational%2F2010%2FSeptember%2Finternational_September1292.xml&section=international