இஸ்லாமிய எதிர்ப்பு எம்பி வில்டர்ஸ் மீதான வழக்கு விசாரணைக்கு வந்தது!

04/10/2010 15:00

இஸ்லாமிய எதிர்ப்பு எம்பி வில்டர்ஸ் மீது வழக்கு விசாரணைக்கு வந்தது!  

ஐரோப்பாவில் இஸ்லாமிய எதிர்ப்பினால் பிரபலமான நெதர்லாண்டு நாடாளுமன்ற உறுப்பினரான கியர்ட் வில்டர்ஸ் மீது இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக வெறுப்பைப் பரப்பி வருவதாகத் தொடரப்பட்டுள்ள வழக்கு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது.

ஃபித்னா என்ற பெயரில் குறும்படம் எடுத்து இஸ்லாமிய விழுமியங்களைச் சாடிய வில்டர்ஸ், முஸ்லிம்களின் புனித நூலான குரானை ஹிட்லரின் சுயசரிதையான Mein Kampf  உடன் ஒப்பிட்டு மேலும் சர்ச்சைகளை உருவாக்கினார்.

தற்போது தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு நவம்பர் 4 அன்று வெளியாகும். இவ்வழக்கில் வில்டர்ஸ் மீது சுமத்தப்பட்ட குற்றம் உறுதி செய்யப்பட்டால் அவருக்கு 7600 யூரோக்கள் அபராதம் விதிக்கப்படும்.

நெதர்லாண்டுக்கு வர முஸ்லிம்களுக்குத் தடை, மசூதிகள் கட்ட நிரந்தரத் தடை, இஸ்லாமிய ஹிஜாபின் மீது கொடும்வரி போன்றவை அவரது பிரச்சாரங்களில் சிலவாகும்.

Inneram