ஈராக் சிறையில் 30 ஆயிரம் கைதிகள் கடும் சித்ரவதை: ஆய்வில் தகவல்

13/09/2010 13:04

ஈராக்கின் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள் எந்தவித விசாரணயின்றி பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாகி வருவதாகவும், அவர்களுக்கு வக்கீல்கள் உதவி கிடைக்கமால் சிறைக்குள்ளேயே விசாணையின்றி இறந்து வருவதாகவும் மனித உரிமை அமைப்பு ஒன்று பகீர் தகவல் வெளியிட்டுள்ளது. லண்டனை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ( ஆம்னஸ்டி இன்டர்நேசனல் ) அமைப்பான , அரசியல் குற்றவாளிகளுக்கு அளிக்கப்படும் பொது மன்னிப்பு குறித்த மனித உரிமை அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ஈராக்கின் குர்தீஷ் மாகாணத்தினைச் சேர்ந்த கைதிகள் தான் அதிக அளவில் ஈராக் சிறைகளில் அடைக்கப்பட்டு பல்வேறு கொடுமைகள் அவர்களுக்கு இழைக்கப்பட்டு வருவதாகவும், உடலில் மின்சாரத்தை பாய்ச்சியும் சித்ரவதை செய்யப்பட்டு வருகிறார்கள்.மேலும் உடலநலக்குறைவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையான சிகிச்சையளிக்காமல் பலர் சிறைக்குள்ளேயே இறந்துவிட்டதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சித்ரவதைக்குள்ளான கைதிகள் விடுதலை கிடைக்காமலும், வக்கீல்கள் வாதட உரிமை மறுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.