ஈராக்கில் பணியை முடித்து பிரிட்டன் வீரர்கள் நாடு திரும்பவுள்ளனர்

22/05/2011 17:45

ஈராக்கில் பிரிட்டன் ராணுவ ஓபரேஷன் முடிவடைந்தது. றோயல் கடற்படை வீரர்கள் ஈராக்கிய கடற்படை வீரர்களுக்கு அளித்த பயிற்சியை நிறைவு செய்து கொண்டனர்.

 

கடந்த 2003ஆம் ஆண்டு ஈராக் மீது அமெரிக்க தலைமையிலான கூட்டுப்படை தாக்குதல் நடைபெற்றது. இந்த தாக்குதலில் முன்னாள் அதிபர் சதாம் ஹுசைன் கொல்லப்பட்டார். சதாம் ஹுசைன் உலகை அச்சுறுத்தும் பயங்கர ஆயுதங்களை வைத்து இருந்தார் என இந்த படையெடுப்பு நடைபெற்றது.

 

அவரது மரணத்திற்கு பின்னர் ஈராக்கில் தொடர்ந்து தீவிரவாத தாக்குதல்கள் நடந்தன. இதனால் உள்நாட்டு பாதுகாப்பு பணியை ஸ்திரப்படுத்த வேண்டிய நிலையில் பிரிட்டன் கடற்படையினர் மற்றும் இதர வீரர்கள் முகாமிட்டனர்.

 

அவர்கள் ஈராக் வீரர்களுக்கு தீவிர பாதுகாப்பு பயிற்சியை அளித்தனர். பிரிட்டன் கடற்படை வீரர்கள் அளித்த பயிற்சி டெலிக் என அழைக்கப்பட்டது. இந்த டெலிக் பயிற்சியை பிரிட்டன் கடற்படை வீரர்கள் இன்னும் சில மணிநேரங்களில் முடித்துக் கொண்டு நாடு திரும்புகிறார்கள்.

 

பிரிட்டனின் பெரும்பாலான வீரர்கள் திரும்பினாலும் ஒரு சில வீரர்கள் ஈராக் தலைநகர் பாக்தாத்தின் பிரிட்டன் தூதரகத்தில் இருப்பார்கள். ஈராக் போரின் போது அதிகபட்சமாக 46 ஆயிரம் பிரிட்டன் வீரர்கள் முகாமிட்டு இருந்தனர்.

2009ஆம் ஆண்டு ஜூலை மாதம் பிரிட்டனின் அதிகப்பட்ச வீரர்கள் நாடு திரும்பினார்கள். பாஸ்ரா பிரிட்டனின் முக்கிய முகாமாக இருந்தது. இந்த முகாமில் இருந்து அதிக அளவு வீரர்கள் திரும்பினார்கள்.

 

ஈராக் போரின் போது 2003ஆம் ஆண்டில் இருந்து 179 பிரிட்டிஷ் வீரர்கள் உயிரிழந்தனர். அவர்களுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் லியாம் பொக்ஸ் அஞ்சலி செலுத்தினார். ஈராக்கின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்கு பாடுபட்டு உயிர் நீத்த அந்த பிரிட்டன் வீரர்களின் சேவையை புகழ்ந்துரைத்தார். ஈராக்கின் 1800 வீரர்களுக்கு பிரிட்டன் கடற்படையினர் பயிற்சி அளித்தனர்.

நியூஸ்ஓநியூஸ்.காம்