ஈரானில்,ஒரே நேரத்தில் 11 தீவிரவாதிகளுக்கு தூக்கு தண்டனை

21/12/2010 16:18

 

ஈரானின் சிஸ்தான்- பலுசிஸ்தான் மாகாணத்தில் சன்னிபிரிவை சேர்ந்த ஜூந்தாலா என்ற தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் அங்கு வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

ஷியா பிரிவினரின் வழிபாட்டு ஊர்வலத்திலும் புகுந்து தாக்குதல் நடத்தினர். ஈரானின் சட்ட விதிகளுக்கு புறம்பாக லஞ்ச ஊழல் மற்றும் கடவுள் எதிர்ப்பு நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

 

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் பதுங்கியிருக்கும் இவர்கள் இந்த மாதத்தில் மட்டும் சபாகர் நகரில் 15 தடவை தற்கொலை தாக்குதல் நடத்தியுள்ளனர்.

 

இதில், 39 பேர் பலியாகியுள்ளனர். 50-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். இதை தொடர்ந்து அந்த தீவிரவாத அமைப்பை சேர்ந்த 11 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் மீது சிஸ்தான்- பலுசிஸ்தான் மாகாண கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இதை தொடர்ந்து அவர்களுக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. எனவே அவர்கள் 11 பேரும் நேற்று ஷதெதான் சிறையில் ஒரே நேரஙித்தில் தூக்கிலிட்டு கொல்லப்பட்டனர்.

 

இந்த தகவலை சிஸ்தான்- பலுசிஸ்தான் மாகாண நீதித்துறை தலைவர் இப்ராகிம் ஹமிதி தெரிவித்துள்ளார்.

ஜூந்தாலா தீவிரவாத அமைப்பின் தலைவர் அப்தொல்மலேக்ரிகி கடந்த ஜூன் மாதம் தூக்கிலிடப்பட்டார்.
 

 

alaigal.com