ஈரான் தாக்கப்பட்டால், பதிலடி உலக அளவில் இருக்கும் - அதிபர் அகமதினிஜாத் எச்சரிக்கை

23/08/2010 10:22

ஈரான் அதிபர் அகமதினிஜாத் கத்தார் நாட்டு பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அணுசக்தி பிரச்சினையில் ஈரான் தாக்கப்பட்டால், அதற்கான பதிலடி உலக அளவில் இருக்கும் என்று எச்சரித்து இருக்கிறார். அவர் மேலும் கூறியதாவது:- 

ஈரான் தாக்கப்பட்டால், அதற்காக பதிலடி கொடுக்க எங்களுக்கு இருக்கும் வழிமுறைகளுக்கு எல்லையே இல்லை. உலக அளவில் பதிலடி கொடுப்போம். நாங்கள் அணு ஆயுதங்களை தயாரிக்க மாட்டோம் என்று தொடக்கம் முதல் கூறி வருகிறோம். எங்கள் திட்டம் எல்லாம் மின்சார உற்பத்திக்காக அணுசக்தியை பயன்படுத்துவது தான்.

இஸ்ரேலுடன் நெருக்கமாக உள்ள சில நாடுகள் ஈரான் மீது தாக்குதல் நடத்த யோசித்து வருகிறார்கள். ஆனால் அவர்களின் முதலாளியான அமெரிக்கா, அவர்களை ஈரானை தாக்க அனுமதிக்காது என்று நம்புகிறேன். அப்படி தாக்கினால் ஈரானின் பதிலடி கடுமையாக வேதனையானதாகவும் இருக்கும்.

இவ்வாறு அகமதினிஜாத் கூறினார்.