ஈரான் பெண்: கல்லால் அடித்து கொல்லப்படமாட்டார், தூக்கில் போட முடிவு

12/12/2010 22:20

ஈரானை சேர்ந்தவர் சாகினே மொகமதி அஸ்தியானி. இவரை கல்லால் அடித்து கொல்ல ஈரான் அரசு உத்தரவிட்டிருந்தது. வேறு ஒரு ஆணுடன் தவறான தொடர்பு கொண்டிருந்ததாக இவருக்கு அந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் உலக நாடுகளும், சமூகசேவை அமைப்புகளும் இந்த தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டன. எனவே அந்த தண்டனையை ஈரான் அரசு நிறுத்தி வைத்தது.
 
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு அஸ்தியானியின் கணவர் கொலை செய்யப்பட்டார். அவரை கொலை செய்ய கள்ளக் காதலர்களுக்கு உதவியதாக அஸ்தியானி மீது மற்றொரு குற்றச்சாட்டும் உள்ளது.
 
இந்த நிலையில் நேற்று திடீரென அஸ்தியானியின் ஒப்புதல் வாக்குமூலத்துடன் கூடிய வீடியோ படம் ஈரான் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது.
 
அதில், தான் கள்ளக்காதலர்களுடன் சேர்ந்து கணவரை கொலை செய்தது எப்படி என அவர் நடித்து காட்டினார். இது ஈரானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
இதற்கிடையே கல்லால் அடித்து கொல்லும் தடை கடந்த 2006-ம் ஆண்டு அஸ்தியானிக்கு வழங்கப்பட்டது. ஆனால் கடந்த 2005-ம் ஆண்டு முதல் இதுபோன்ற கொடூர தண்டனையை ஈரான் அரசு தடை செய்துள்ளது.

Chennaionline.com
 
எனவே அவர் கல்லால் அடித்து கொல்லப்பட மாட்டார் என இந்த வீடியோவை ஒளிபரப்பிய டி.வி. தெரிவித்தது. அதே நேரத்தில் கணவரை கொன்ற வழக்கில் இவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்படலாம் என்றும் கூறியது. அதை உறுதிப்படுத்தும் விதமாகதான் அஸ்தியானியின் வாக்குமூலத்தை ஒளிபரப்பியிருக்கலாம் என கருதப்படுகிறது. (டிஎன்எஸ்)