ஈரான் பெண்ணுக்கு இன்று மரண தண்டனை நிறைவேற்றம்

03/11/2010 09:59

 கடந்த 2006 ஆம் ஆண்டு விபச்சாரம் மற்றும் கணவனை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு குற்றத்தையும் ஒப்புக் கொண்ட ஈரானியப் பெண் ஸகீனா முஹம்மதி அஸ்தியானிக்கு அந்நாட்டு நீதி மன்றம் கல்லெறிந்து கொல்ல உத்தரவிட்டது. இதற்க்கு உலக நாடுகளும் பெண்ணினவாதிகளும்(?) எதிர்ப்பு தெறிவித்து வந்தனர். பல்வேறு போராட்டங்களும் மேற்கொள்ளப்பட்டது. காட்டுமிராண்டித்தனமான தண்டனை என்றெல்லாம் விமர்சனம் செய்யப்பட்து. இதற்கென ஜெர்மன் நாட்டை தலைமையிடமாகக் கொண்டு தி இன்டர்நேசனல் கமிட்டி அகெய்ன்ஸ்ட்

ஸ்டோனிங் (The International Comittee Agaist Stoning) என்ற ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டு தொடர்ந்து போராடிவந்தனர்.

 

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் தான் தண்டனையை ஏற்றுக்கொள்ளத்தயாராக இருப்பதாக அந்தப் பெண் கூறியதைத் தொடர்ந்து அவருக்கு தண்டனையை நிறைவேற்ற ஈரான் அரசு முடிவெடுத்தது. மீண்டும் உலகஅளவில் ஒவ்வொரு நாட்டு தலைவர்களும் தமது கண்டனங்களை தெறிவிக்கத் தொடங்கினர். அதற்கும் மேல் ஜெர்மன்நாட்டு பத்திரிக்கையாளர்கள் 3 பேர் ஸகீனாவுடைய மகன்களிடம் இவரைபற்றி பேட்டி எடுத்து பரப்பரப்பாக வெளியிட்டது அதில் தனது தாயை கப்பாற்ற நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டு இருந்தது. இந்த விசயத்தில் கோபமுற்ற ஈரான் அரசு ஸகீனாவின் மகனையும் 3 ஜெர்மன் பத்திரிக்கையாளர்களையும் கைதுசெய்து சிறையில் அடைத்தது.

 

மேலும் பிரச்சனை வழுவடைவதை தவிர்க்க அவரது இன்னொரு குற்றமான கணவன் கொலைக்கு வழங்கப்படும் தூக்குதண்டனை மூலம் அவரது தண்டனையை நிறைவேற்ற திட்டமிட்டு. அது இன்று நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

 

இதை எதிர்ப்பவர்கள் இஸ்லாமிய நம்பிக்கைக்கு எதிராக செயல்படுபவர்களே தவிர உண்மையில் பெண்ணினத்திற்கு ஆதரவாக அல்ல. பெண்களுக்கு எதிரான எத்தனையோ குற்றங்ளுக்கு நியாயமான தண்டனைகள் வழங்கப்படுவதில்லை அதனால்தான் பாலியல் சம்மந்தமான குற்றங்கள் இன்று உலகில் மலிந்து விட்டன. சிறுவர் சறுமியர்களைக் கூட இந்த காமுகர்கள் விட்டுவைப்பதில்லை. அதைஎல்லாம் எதிர்த்து கடும் தண்டனை வழங்கப் போராடாத இந்த மனித உதிமை ஆர்வலர்கள்(?) இஸ்லாமிய சட்டத்திற்கு எதிராக போராட இந்த பெண்னை பயன்படுத்திக் கொண்டது ஏற்க்க முடியாத ஒன்றாகும், இது அந்நாட்டு நீதித்துறையின் நடவடிக்கைகளுக்கு எதிரானது.

 

மேலும் மேலைநாட்டு கலாச்சாரத்தில் இது வரவேற்கத் தக்க ஒன்றாக ஆகிவிட்டதால் அவர்களின் இயல்பான நடவடிக்கையை இஸ்லாம் வண்மையாக கண்டிப்பதும், கடுமையான தண்டனை வழங்குவதும் அவர்களால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை, காரணம் குற்ற உணர்ச்சி. தமது முன்னோருக்கும், தமக்கும், தமது தலைமுறைக்கும் அந்த பலி விழுந்து விடும் என்ற பயம். இந்தப் பெண் இஸ்லாமிய தண்டனையை இந்த உலகில் ஏற்றுக் கொண்டால் மறுமையில் அவரது குற்றம் மண்ணிக்கப்படும் என்பது இஸ்லாமிய நம்பிக்கை. அதனால் தான் தானே தண்டனையை ஏற்றுக் கொள்வதாகவும் அந்தப் பெண் அறிவித்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

அபூஅஸ்ஃபா