எகிப்தில் போராட்டம் வலுக்கிறது-முபாரக் பதவி விலக எல்பராதே கோரிக்கை

31/01/2011 15:56

பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதை அடுத்து இன்று ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் அதிபர் ஹோஸ்னி முபாரக்கை வெளியேற்ற போராட்டத்தை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

மேலும், போராட்டத்தில் தற்போது நோபல் பரிசு பெற்றவரும், முன்னாள் சர்வதேச அணு சக்தி ஏஜென்சியின் தலைவருமான முகம்மது எல்பராதேயும் குதித்துள்ளார்.

நேற்று இரவு தனக்கு விதிக்கப்பட்ட வீட்டுக் காவலையும் மீறி தஹ்ரிர் ஸ்கொயரில் நடந்த பிரமாண்டப் போராட்டத்தில் கலந்து கொண்டார். உடனடியாக முபாரக் விலக வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

இது குறித்து எல்பராதே சிஎன்என் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில்,

முபாரக் இன்றே பதவி விலக வேண்டும். நாட்டில் சுமூகமான ஒற்றுமையான அரசாங்கம் அமைய சுதந்திரமாகவும், நியாயமாகவும் தேர்தல் நடத்த வேண்டும் என்றார்.

இதற்கிடையே மத்திய கெய்ரோவில் கூடிய போராட்டக்காரர்கள் இன்று பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். முபாரக்கிற்கு எதிரான போராட்டம் வலுப்பெறுகிறது. ஆனால் முபாரக் தனது பிடிவாதத்தைத் தளர்த்திக் கொள்வதாக தெரியவில்லை.

thats tamil oneindia.in