ஏகத்துவவாதிகளை புறக்கணிக்கும் MDPS

09/04/2011 10:09

 

அளவற்ற அருளாளனும் நிகரில்லா அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்..

 

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக புதுவலசையில் ஏகத்துவ பிரச்சாரம் துவங்கியது முதல் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து இன்று தனி தொழுகைப் பள்ளி என்ற அளவில் வளர்ந்துள்ள ஏகத்துவவாதிகளுக்கு எதிராக தற்போதைய ஜமாஅத் நிர்வாகம் புதிய பிரச்சனையை கொடுத்து வருகிறது. பதவியேற்கும் போதே தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தினருக்கும் புதுவலசை முஸ்லிம் தர்ம பரிபாலன சபைக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை என்று கூறியவர்களுக்கு முறையான பதிலடி கொடுக்கவே அவர்களின் பலிவாங்கும் நோக்கம் தவிடு பொடியானது.
 
இதற்கு முன் இருந்த நிர்வாகத்தில் இருந்தே சிலரிடம் எந்த இயக்கம் என்று பார்க்காமல் பொதுவாக ஏகத்துவவாதிகளிடம் யாத்திரை (வெளிநாட்டில் இருந்து வருபவர்களிடம் வாங்கப்படும் ஜமாஅத் சந்தா) மகிமை வாங்குவதில்லை, தவ்ஹீத் ஜமாஅத்தை மட்டும் புறக்கணித்தால் அவர்களின் நோக்கத்திற்கு தவ்ஹீத்வாதிகள் தனியாகச் சென்றது தான் காரணம் என்று எடுத்துக் கொள்ளலாம் ஆனால் தவ்ஹீத் ஜமாஅத் சாராதவர்களிடமும் வாங்குவதில்லை அது மட்டுமில்லாமல் பொதுப்பிரச்சனைகளில் ஏகத்துவாதிகளுக்காக ஜமாஅத் தலையிடுவதில்லை மாறாக அவர்களுக்காக நாங்கள் பேசமுடியாது என்று மறுத்து வருகின்றனர், ஏன் பொதுக்கூட்டத்திற்குக் கூட அவர்களிடம் கையெழுத்து வாங்க வேண்டாம் என்று ஜமாஅத் உதவியாளரிடம் நிர்வாகிகள் உத்தரவிட்டுள்ளார்கள்.
 
இதிலிருந்து தற்போது ஜமாஅத்தை ஆட்சி செய்யும் சில அரசியல் வாதிகளின் பலி வாங்கும் நடவடிக்கை தெறிகிறது. யாரெல்லாம் அவர்களை சில காலங்களுக்கு முன் ஜமாஅத்தில் இருந்து தூக்கி எரியக் காரணமாக இருந்தார்களோ அவர்களையெல்லாம் ஜமாஅத் என்ற பொதுவான அமைப்பைப் பயன்படுத்தி வெளியேற்றத் துடிக்கின்றனர். இதற்கு சில கொள்கை இல்லாத வெட்டிக் கூட்டங்கள் ஆதரவாக இருக்கிறது. இது வெல்லாம் வெளிப்படையாக செய்யாமல் மறைமுகமாக அவர்களின் துவேசத்தை துவங்கியுள்ளனர். எதிர்த்துப் பேச ஆளில்லாவிட்டால் தாம் நினைத்ததையெல்லாம் சட்டமாக்கிவிடலாம், முடிந்த வரைக்கும் சுருட்டிக் கொள்ளலாம் என நினைக்கிறார்களோ என்னவோ...
 
இவர்களின் வண்டாவாளங்களை நமது இணையதளத்தில் எழுதியதால் இணையதளத்தின் மீதும் இதை நடத்துபவர்கள் மீதும் சைபர் கிரைமில் புகார் தெறிவித்து வெளிநாட்டுப் பிழைப்புக்கு ஆப்பு வைக்கப் போகிறார்களாம், அதற்காக பல்வேறு முயற்சிகளையும் ஜமாஅத் நிர்வாகத்தில் உள்ள சில அரசியல்வாதிகள் எடுத்துள்ளனர். சைபர் கிரைம் என்றால் என்ன வென்று தெறியாததால் இந்த முயற்சியை செய்துள்ளனர். இவர்கள் ஜமாஅத் லேபிலில் சைபர் கிரைம் புகார் கொடுத்திருந்தால் நமது ஜமாஅத்துக்குத்தான் அவமானம் ஏற்பட்டு இருக்கும். அல்லாஹ் காப்பாற்றி விட்டான்.
 
மிஞ்சிப் போனால் இவர்களால் திருமணம் செய்து வைக்க மாட்டோம், கட்டப்பஞ்சாயத்து செய்யமாட்டோம் அதற்கும் மேல் போனால் மற்ற ஊர்களில் நடந்தது போல் உங்கள் ஜனாஸாக்களை அடக்கம் செய்ய அனுமதிக்க மாட்டோம் என்று சொல்ல முடியும் இதையெல்லாம் பல ஊர்களில் சந்தித்த அனுபவத்தையும் சந்திப்பதற்கான துணிவையும் அல்லாஹ் ஏகத்துவவாதிகளுக்கு வழங்கியிருக்கிறான். தனியாக பிரித்துப் பார்க்கத் துடிக்கும் இவர்களால் பல குடும்பங்களில் பிரச்சனை ஏற்படும், ஊராரும் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்பது மட்டுமே இவர்கள் நடவடிக்கைகளின் நிதர்சனம்.
 
தனி ஜமாஅத் துவங்குவதோ, தனியாக செயல்படுவதோ பெரிய காரியம் இல்லை இவர்களை விட சிறப்பான முறையில் நம்மால் செயல்படமுடியும் 10 ரூபாய் செலவில்லாமல் திருமணம் போன்ற காரியங்களை செய்துவைக்க முடியும், ஜனாஸாவை அடக்கம் செய்ய எந்த எல்லைக்கும் செல்லமுடியும். ஆனால் நோக்கம் அது அல்ல. ஜமாஅத்தில் தமக்குள்ள உரிமைகளை விடடுவிடக் கூடாது என்பதற்காகவே பொறுமையாக இப்பிரச்சனைகளை கையான்டு வருகின்றனர் புதுவலசை ஏகத்துவவாதிகள். எதிர்ப்பவர்களும் விபரீதத்தை உணர்ந்து தாமாகவே ஜமாஅத்தை விட்டு வெளியேறவேண்டும் என்ற எண்ணத்திலேயே பல்வேறு பிரச்சனைகளை கொடுத்து வருகின்றனர்.
 
இந்த நிலையில் பொதுமக்களில் சிலர் சுன்னத் வல் ஜமாஅத் மற்றும் தவ்ஹீத் ஜமாஅத்துக்கு இடையேயான பிரச்சனை என்று நினைத்து ஜமாஅத்துக்கும் அந்த அரசியல் வாதிகளின் புத்திகெட்ட செயல்களுக்கும் ஆதரவாக நிற்கின்றனர். நேருக்கு நேர் நிர்கவோ பேசவோ திராணியத்தவர்களெல்லாம் இன்று ஏகத்துவவாதிகளுக்கு எதிராக விசமத்தனமான கருத்துக்களை விதைத்து வருகின்றனர்.
 
அல்லாஹ் போதுமானவன், அவர்களின் சூழ்ச்சியை எல்லாம் அல்லாஹ் அறியாதவன் இல்லை அல்லாஹ் அவர்களையெல்லாம் மிகைத்த சூழ்ச்சியாளன்.