ஒபாமா குறித்து வைகோ எழுதிய நூல் 'Yes, We Can!'

02/12/2010 21:01

Obama and  Vaikoஅமெரிக்க அதிபர் பராக் ஒபாமா குறித்தும், கருப்பின மக்களின் விடுதலைப் போராடடம் குறித்தும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எழுதிய `ஆம்; நம்மால் முடியும்' என்ற நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பு புத்தகம் ( 'Yes: We Can'!)
டெல்லியில் வெளியிடப்பட்டது.

அதில் காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வவரும் மத்திய அமைச்சருமான பரூக் அப்துல்லா, ஹரியானா மாநில முன்னாள் முதல்வரும், இந்திய தேசிய லோக்தளம் கட்சியின் தலைவருமான ஓம்பிரகாஷ் செளதாலா ஆகியோர் கலந்துகொண்டார்.

டெல்லி மான்சிங் சாலையில் அமைந்து உள்ள, பஞ்சாப் மாநில அரசுக்குச் சொந்தமான கபூர்தலா இல்லத்தில் இந்த விழா நடந்தது.
அதில் பங்கேற்ற பரூக் அப்துல்லா பேசுகையில், வைகோ ஒரு போராட்டக்காரர். ஈழத் தமிழர்களுக்காக அவரது குரல் எப்போதும் ஓங்கி ஒலிக்கிறது என்றார்.

நிகழ்ச்சியில் பஞ்சாப் மாநில துணை முதல்வரும், சிரோமணி அகாலிதளம் கட்சியின் தலைவருமான சுக்பீர்சிங் பாதல் கலந்து கொண்டு நூலின் முதல் பிரதியை பெற்றுக் கொண்டார்.

அதிமுக சார்பில் எம்பி தம்பிதுரை கலந்து கொண்டு வைகோவுக்கு அக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா அனுப்பிய வாழ்த்துச் செய்தியை வாசித்தார்.

நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா, தெலுங்கு தேசம் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் நாகேஸ்வர ராவ், பாஜக தலைவரும் மாநிலங்களவையின் முன்னாள் துணைத் தலைவர் டாக்டர் நஜ்மா ஹெப்துல்லா, ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் என்.டி.ராமராவின் மகன் ஹரிகிருஷ்ணா எம்.பி. உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தேர்தல் பிரச்சாரத்தின்போது பராக் ஒபாமா கூறிய வரலாற்றுச் சிறப்பு மிக்க வாசகம் தான் 'Yes: We Can'! என்பது குறிப்பிடத்தக்கது. webdunia.com