கடவுள் மற்றும் மத நம்பிக்கையாளர்கள் ஆரோக்கியமாக வாழ்வதாக ஆய்வில் தகவல்!

27/09/2010 17:26

மத கோட்பாடுகளை ஒழுங்காக பின்பற்றி நடப்பவர்கள் ஆரோக்கியமாக வாழ்வதாக அமெரிக்க ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலை., ஆராய்ச்சியாளர் கிறிஸ்டோபர் ஸ்கீட்டில், கடந்த 1972ம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டு வரை 423 பேரிடம் ஆய்வு செய்தார் .மத கோட்பாடுகளை ஒழுங்காக பின்பற்றுபவர்களும், ஒரு மதத்திலிருந்து மற்றொரு மதத்திற்கு மாறி அந்த மதத்தின் கோட்பாடுகளை பின்பற்றுபவர்களும் நல்ல ஆரோக்கியமான உடலைப் பெற்றிருப்பதாகவும், மத நம்பிக்கைகளை இழந்த பெரும்பாலார் உடல் ஆரோக்கியம் குன்றியவர்களாகக் காணப்பட்டதாக கிறிஸ்டோபர் தனது ஆய்வில் தெரிவித்துள்ளார்.

மத கோட்பாடுகளை கடைபிடிப்பவர்கள் கெட்ட பழக்கங்களை விட்டொழித்து விடுகின்றனர். மது, புகைப்பழக்கம் போன்றவை இல்லாததாலும், உபவாசம் இருப்பதாலும், வழிபாடுத் தலங்களுக்கு செல்வது, நல் உபதேசங்களைக் கேட்பது போன்றவற்றால் அவர்கள் நேர்மறையான சிந்தனையுடையவர்களாக உள்ளனர். இதன் மூலம் அவர்களது ஆரோக்கியம் நீடிக்கிறது என, தனது ஆய்வறிக்கையில் கிறிஸ்டோபர் தெரிவித்துள்ளார்.

Dinamalar