காஷ்மீர் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை ரத்து செய்ய ஐ.நா மனித உரிமை அமைப்பு கோரிக்கை

22/01/2011 19:27

ஜம்மு - காஷ்மீர், நாகலாந்து உள்ளிட்ட வட கிழக்கு மாநிலங்களில் நடைமுறையில் உள்ள ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரச் சட்டம், பொது பாதுகாப்புச் சட்டம், சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் ஆகியவற்றை இந்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று இந்தியா வந்துள்ள ஐ.நா.வின் மனித உரிமை ஆய்வாளரும் சிறப்பு அறிக்கையாளருமான மார்கரெட் சேகாக்கியா கூறியுள்ளார்.

இந்தியா வந்து கடந்த 10 நாட்களாக ஜம்மு - காஷ்மீர், அஸ்ஸாம் உள்ளிட்ட வட கிழக்கு மாநிலங்கள், குஜராத், மேற்கு வங்கம், ஒரிசா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் விரிவாக பயணம் செய்த மார்கரெட் சேகாக்கியா, நேற்று டெல்லியில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தார்.

இந்த சந்திப்பின் போது அவர் வெளியிட்ட அறிக்கையில், ஜம்மு - காஷ்மீரிலும், இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களிலும் மனித உரிமை நிலை கவலையளிக்கிறது என்றும், அம்மாநிலங்களில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஆயுத படைகள் சிறப்பு அதிகாரச் சட்டம், பொது பாதுகாப்புச் சட்டம் ஆகியவற்றை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று கூறியுள்ளார்.

ஆயுத படைகள் சிறப்பு அதிகாரச் சட்டம், பொது பாதுகாப்புச் சட்டம், சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் ஆகியன மனித உரிமை பாதுகாவலர்களின் செயல்பாட்டை முடக்குவதாகவும், அவர்களை அச்சுறுத்தவும் ஒடுக்கவும் பயன்படுத்தப்படுவதாகவும் ஏராளமான புகார்கள் அளிக்கப்பட்டதாகக் கூறியுள்ளார்.
இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் உள்ளது என்பதை தான் ஒப்புக்கொண்டாலும், தேச அளவிலும், பல மாநிலங்களிலும் பாதுகாப்புப் படைகளின் மூலம் நடைமுறைப்படுத்தப்படும் சட்டங்கள் மனித உரிமை நிலைகளை கவலைக்குள்ளாக்கியுள்ளது என்று கூறியுள்ளார்.

“ஆயுத படைகள் சிறப்பு அதிகாரச் சட்டமும் (Armed forces special powers act - AFSPA), பொது பாதுகாப்புச் சட்டமும் (Public Safety act - PSA) ஆகியவற்றை திரும்பப் பெற வேண்டும். இந்த சட்டங்கள் மனித உரிமை காப்பாளர்களின் செயல்பாட்டிற்கும் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாகியுள்ளது” என்று கூறிய சேகாக்கியா, “தேச மனித உரிமை ஆணையம், மாநில மனித உரிமை ஆணையம் ஆகியவற்றின் செயல்பாட்டை மத்திய அரசு மறுபிரிசீலனை செய்ய வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்திய நாட்டின் அடித்தள மக்களாக உள்ள தலித், பழங்குடியினர், மத சிறுபான்மையினர், பாலியல் சிறுபான்மையினர் ஆகியோரின் நலனை காக்க முன்வரும் மனித உரிமை காப்பாளர்களின் நிலை ஆபத்திற்குள்ளாகியுள்ளது என்றும் சேகாக்கியா கூறியுள்ளார்.

வெப்துனியா 22-1-2011