காஷ்மீர் மக்களுக்கு ஆதரவாக குவைத் அமைப்பு முதல் குரல்

17/08/2010 09:16

காஷ்மீரை இந்தியாவுடன் இணைப்பதா, பாகிஸ்தானுடன் இணைப்பதா அல்லது தனி நாடாக பிரகன்ப்படுத்துவதா என்பதை காஷ்மீர் மக்களே தீர்மானிக்க வேண்டும். அந்த முடிவை அவர்கள் சுதந்திரமாக எடுக்க வழி வகுக்க வேண்டும் என்று குவைத் நாட்டில் உள்ள த்வாபித் அல் உம்மா என்ற அமைப்பு தெரிவித்துள்ளது. இதுவே வளைகுடா நாடுகளில் இருந்து வரும் காஷ்மீருக்கான முதல் குரல் ஆகும். 

மேலும் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின் போது அந்த அமைப்பின் செயலர் முஹம்மது ஹேயேஃப் 60 வருடங்களாக தொடர்ந்து வரும் இந்த அவலத்தில் மனித உரிமை மீறல்களும் இந்திய ராணுவத்தினர் கல் எரியும் சிறார்கள் மீது ஆயுத தாக்குதல் நடத்தி கொல்வது போன்ற அக்கிரம செயலும் நடந்து வருவதை சுட்டிக்காட்டினார்.

மேலும் அதிருப்தியை தெரிவித்த அவர் "இந்தியா ஐ.நா.வின் உறுதிமொழியை காக்க தவறிவிட்டதாகவும், அவை காகிதத்தில் வெறும் மையாக உள்ளாதாகவும் கூறி அந்த பகுதியில் வாழும் பலர் காணாமல் போவதாகவும், சிறையில் அடைக்கப்படுவதாகவும், கற்பழிக்கப்படுவதாகவும், சுதந்திரத்துக்கு போராடும் பலரை தீவிரவாதிகள் என போலி முத்திரை குத்தப்படுவதாகவும் கூறினார்.

மனித உரிமை அமைப்புகள் ஒன்றிணைந்து அங்கு மனித உரிமை மீறல்கள்  இடம்பெறுவதைத் தடுக்க முன்வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்த அவர்,  இஸ்லாமிய அமர்வுகளுக்கான அமைப்புடனான (Organization of the Islamic Conference (OIC)) ஒப்பந்தத்தை நடைமுறைபடுத்துவது தொடர்பில் உரிய அழுத்தம் கொடுத்து காஷ்மீர் மக்களைக் காக்க இந்தியா தவறிவிட்டதாகக் கடுமையாகக் கண்டனம் தெரிவித்துள்ளார்.

காஷ்மீரில் உள்ள தற்போதைய நிலை சுமுகமடைந்து முஸ்லீம்கள் மத்தியில் ஒற்றுமை ஓங்க வேண்டும் என்பதைத் தாம் வலிவயுறுத்துவதாகவும், அப்படி இல்லாதபட்சத்தில் இதுவும் பாலஸ்தீன பிரச்சனை போன்றே ஆகும் என்றும் அவர் எச்சரிக்கைவிடுத்துள்ளார்