குற்றப்பத்திரிகை: நித்யானந்தாவின் மனு தள்ளுபடி

02/12/2010 20:52

நித்யானந்தா மீதான வழக்கை விசாரித்து வரும் சி.ஐ.டி. போலீசார், பெங்களூரை அடுத்து உள்ள ராமநகர் தலைமை ஜூடீசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் 430 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர்.

இதை எதிர்த்து நித்யானந்தா சார்பில் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ஏற்கனவே மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் ஐகோர்ட்டில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யக்கூடாது என்று சி.ஐ.டி. போலீசாருக்கு உத்தரவிட வேண்டும். மேலும் குற்றப்பத்திரிகையின் நகல் ஒன்றை வழங்க வேண்டும்'' என்று கூறப்பட்டு இருந்தது.

 

 

இந்த மனு, நீதிபதி சி.ஆர்.குமாரசாமி முன்னிலையில் ஐகோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி குமாரசாமி, நித்யானந்தாவின் மனுவை தள்ளுபடி செய்தார். இது குறித்து நீதிபதி கூறுகையில், ``மனுதாரருக்கும், மனுதாரரின் வக்கீலுக்கும் குற்றப்பத்திரிகையின் நகல் ஒன்றை தலைமை ஜூடீசியல் மாஜிஸ்திரேட்டு வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்'' என்று உத்தரவு பிறப்பித்தார்.


இதற்கிடையே தன் மீதான 2 முதல் தகவல் அறிக்கைகளை (எப்.ஐ.ஆர்.) ரத்து செய்யக்கோரி நித்யானந்தா சார்பில் ஐகோர்ட்டில் கிரிமினல் வழக்குகள் தொடரப்பட்டு இருந்தன. இந்த வழக்குகளும் நேற்று ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தன.


வழக்கை விசாரித்த நீதிபதி, விசாரணையை வருகிற 7-ந் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.Nakkheeran.in