குற்றம் நிரூபிக்கப்பட்டால் எகிப்து முன்னாள் அதிபருக்கு தூக்கு தண்டனை கிடைக்கும்; மூத்த நீதிபதி தகவல்

16/04/2011 18:51

குற்றம் நிரூபிக்கப்பட்டால் எகிப்து முன்னாள் அதிபருக்கு தூக்கு தண்டனை கிடைக்கும்; மூத்த நீதிபதி தகவல்எகிப்து முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபாரக் (82). இவரது ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தினார்கள். இதை தொடர்ந்து அவர் பதவி விலகினார். தற்போது எகிப்தின் ஆட்சி அதிகாரம் ராணுவம் வசம் உள்ளது. இதற்கிடையே ஆட்சியில் இருந்த போது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியது. ஊழல் புகார் போன்றவற்றிற்காக முபாரக்கும் அவரது மகன்கள் கமால், அலா ஆகியோர் ராணுவத்தினரால் கைது செய்யப் பட்டனர்.

 
தற்போது அவர்களிடம் விசாரணை நடை பெற்று வருகிறது.விசாரணையின் போது முபாரக்குக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து ஷார்ம் எல் ஷேக் நகரில் உள்ள ராணுவ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சைக்கு பின் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
 
இந்நிலையில் முபாரக் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு குறைந்தபட்சம் ஆயுள் தண்டனையும், அதிக பட்சமாக தூக்குத்தண்டனையும் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இந்த தகவலை மூத்த நிதிபதி ஒருவர் தெரிவித்தார்.

 

மாலைமலர்