கூட்டுக் குர்பானி 2010 அறிவிப்பு

18/10/2010 15:41

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

நமதூரில் கடந்த வருடம் கூட்டுக் குர்பானி நடைமுறைபடுத்ப்பட்டு மிகப்பெரிய அளவுக்கு மக்களிடையே வரவேற்ப்பை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இன்ஷா அல்லாஹ் இந்தவருடம் ஹஜ் பெருநாளுக்காக குர்பானி கொடுக்க திட்டமிட்டுள்ள நண்பர்கள் கவனத்திற்க்கு...

1) கூட்டுக்குர்பானியாக 1 மாட்டுக்கு 7 பேர் வீதம் பஙகுதாரர்களாக சேர்ந்து கொள்ளலாம்.

2) 1 பங்கு ரூபாய் 1300.00 (வெட்டுக்கூலி உட்பட்ட செலவு எல்லாம் சேர்த்து) என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. கணக்கு விபரம் பின்னர் தெறிவிக்கப்படும்.

3) பங்குதரர் வீட்டுக்கும் அவர் பரிந்துரைக்கும் ஏழைகளுக்கும் குர்பானி கரி கொடுத்து விடப்படும்.

4) ஊரில் உள்ள ஏழை மக்களை பட்டியலிட்டு அனைவருக்கும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

5) பங்குதாரர்கள் துல்ஹஜ் பிறை 1 துவங்கியதிலிருந்து தமது தாடி, மீசை மற்றும் நகம் வெட்டுவதை தவிர்த்துக் கொள்ளவேண்டும்.

மேலும் கடந்த வருடம் நாம் வழங்கிய குர்பானி சம்மந்தமான செய்தியை காண

மேலதிக விபரங்களுக்கும், தங்களையும் பங்குதாரராக இணைத்துக் கொள்வதற்க்கும் தொடர்பு கொள்ள வேண்டியவர்கள்

புதுவலசை - சகோ. ஜாஹிர் அலி 9486326575, 9600805634

சவுதி அரேபியா - சகோ. பசுலுதீன் அவர்கள் 0096650 2823740

குவைத் - சகோ. நியாஸ் அஹமது 00965 97376038

அமீரகம் (துபாய், அபுதாபி, சார்ஜா....) - சகோ. அப்துல் ஹலீம் 0097150 8845461

அல்குர்ஆன் 22:37   لَن يَنَالَ اللَّهَ لُحُومُهَا وَلَا دِمَاؤُهَا وَلَٰكِن يَنَالُهُ التَّقْوَىٰ مِنكُمْ ۚ كَذَٰلِكَ سَخَّرَهَا لَكُمْ لِتُكَبِّرُوا اللَّهَ عَلَىٰ مَا هَدَاكُمْ ۗ وَبَشِّرِ الْمُحْسِنِينَ

அவற்றின் (குர்பானியின்) மாமிசங்களோ, அவற்றின் இரத்தங்களோ அல்லாஹ்வை அடைவதில்லை. மாறாக உங்களிடமுள்ள (இறை) அச்சமே அவனைச் சென்றடையும். அல்லாஹ் உங்களுக்கு நேர் வழி காட்டியதற்காக அவனை நீங்கள் பெருமைப்படுத்திட இவ்வாறே அதை அவன் உங்களுக்குப் பயன்படச் செய்தான். நன்மை செய்வோருக்கு நற்செய்தி கூறுவீராக!