கைப்பந்துப் போட்டி - கீழக்கரை அணி முதல் பரிசை தட்டிச் சென்றது

01/02/2010 16:26

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

 

 1-2-2010

கைப்பந்துப் போட்டி - கீழக்கரை அணி முதல் பரிசை தட்டிச் சென்றது

ஏ.கே.எம் அஹமது மீரா அவர்களின் நினைவாக நேற்று நமதூரில் நடத்தப்பட்ட கைப்பந்துப் போட்டியில் 16 அணிகள் கலந்து கொண்டது.

கீழக்கரையிலிருந்து 4 அணிகளும், இளையாங்குடியிலிருந்து 2 அணிகளும், புதுவலசையில் 2 அணிகளும், பனைக்குளம், இராம்நாட், சித்தார்கோட்டை, வாழூர், வேதாளை, ஒப்பிலான், திருப்பாலைக்குடி மற்றும் தேர்போகி ஆகிய ஊர்களிலிருந்து தலா ஒரு அணியும் இப்போட்டியில் கலந்து கொண்டது

மிகுந்த பரபரப்புடன் மாலை 5 மணிக்கு விளையாட்டுவிழா துவங்கியது, மஃரிப் தொழுகைக்குப் பின் போட்டிகள் ஆரம்பிக்கப்பட்டது  இரவுவரை போட்டிகள் தொடர்ந்து நடத்தப்பட்டது, காலை பஜ்ரு தொழுகைக்குப் பின் இறுதிப்போட்டி நடத்தப்பட்டது. இதில் கீழக்கரை மூர் வாலிபால் கிலப் “ஏ” அணியும் வேதாளை அணியும் மோதின. இன்று காலை 7 மணிக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

பரிசு விபரம்

1. முதல் பரிசு கீழக்கரை மூர் வாலிபால் கிளப் அணிக்கு வெற்றிக் கோப்பையுடன் ரூபாய் 5000.00 ரொக்கப் பரிசை சகோதரர் முஹம்மது மைதீன் அவர்கள் வழங்கினார்கள்.

2. இரண்டாம் பரிசு வேதாளை அணிக்கு வெற்றிக் கோப்பையுடன் ரூபாய் 3000.00 ரொக்கப் பரிசை சகோதரர் ஏ.கே.எம்.ஏ. களஞ்சியம் அவர்கள் வழங்கினார்கள்.

3. மூன்றாம் பரிசு இளையான்குடி அணிக்கு ரூபாய் 1000.00 ரொக்கப் பரிசை சகோதரர் கலீல் அவர்கள் வழங்கினார்கள்.


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

 

 

 

30.01.2010

புதுவலசையில் கைப்பந்து போட்டி நாளை துவக்கம்

ஏ.கே.எம் அஹமது மீரா அவர்களின் நினைவாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஒரு கைப்பந்து போட்டி நடைபெற்றது அதில் புதுவலசை கைப்பந்து அணி வெற்றி பெற்று கோப்பையை தட்டிச் சென்றது. அதை தொடர்ந்து இரண்டாவதாக கைப்பந்து போட்டி நடத்த சகோதரர் மீரான் மைதீன் அன் பிரதர்ஸ் முடிவு செய்துள்ளனர்.  போட்டிகள் மாலை 4 மணிக்கு துவங்கி இரவுவரை நீடிக்கும், பகல் இரவு ஆட்டமாக நடைபெரும்.


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

 

 

 

அரபி ஒளியுல்லா தர்ஹாவில் மௌலூது ஆரம்பம்

ஒவ்வொரு ஆண்டும் ஸபர் மாதம் வந்துவிட்டால் புதுவலசை அரபி ஒலியுல்லா தர்ஹாவில் மௌலூது ஓதி கந்துரியிடுவது வழக்கம். இஸ்லாமிய மார்க்கத்திற்க்கு முரணான இவ்விழாக்களை நிறுத்தவேண்டும் என தவ்ஹீத் ஜமாஅத்தினர் போராடி வருகின்றனர்.

இஸ்லாம் என்ற பெயரால் எந்த காரியம் செய்யப்பட்டாலும் அது அல்லாஹ் திருமறைக் குர்ஆனில் கூறியிருப்பான் அல்லது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம் வாழ்நாளில் செய்யச் சொல்லியோ அல்லது செய்து காட்டியோ இருப்பார்கள். அவ்வாறு அல்லாஹ்வாலும் அல்லாஹவுடைய தூதர் முஹம்மது (ஸல்) அவர்களாலும் காட்டித்தரப்படாத எந்தக்காரியமும் இஸ்லாம் இல்லை என திருமறைக் குர்ஆன் நமக்கு போதிக்கிறது.

முஹம்மது (ஸல்)  அவர்கள் உயிருடன் இருக்கும் போதே இஸ்லாம் அல்லாஹ்வால் முழுமைப்படுத்தப் பட்டுவிட்டது (மாயிதா 5, வசனம் 3) அதற்க்குப்பின் யார் எதைச் செய்தாலும் அது அல்லாஹ்வால் ஏற்றுக்கொள்ளப் படாது. ஏனென்றால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் ”நமது வழிகாட்டல் இல்லாத ஒரு செயலை ஒருவர் செய்தால் அது (அல்லாஹ்வால்) ரத்து செய்யப்படும்.” (புஹாரி).

மேலும் ”மார்க்த்தில் புதிதாக செய்யப்படும் அனைத்து காரியங்களும் அனாச்சாரம், அனைத்து அனாச்சாரமும் வழிகேடு, அனைத்து வழிகேடும் உங்களை நரகத்தில் கொண்டு சேர்க்கும்” (நஸயி).  என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

மேலும் அல்லாஹ் திருமறையில் கூறுகிறான் ”அல்லாஹ்வும் அவனது தூதரும் ஒரு காரியத்தை முடிவுசெய்யும் போது நம்பிக்கை கொண்ட ஆணுக்கும் பெண்னுக்கும் தமது அக்காரியத்தில் சுய விருப்பம் கொள்ளுதல் இல்லை. அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் மாறு செய்பவர் தெளிவாக வழிகெட்டு விட்டார்” (திருமறை 33-36)

அல்லாஹ்வும் அவனது தூதரும் ஒரு விசயத்தை முடிவு செய்துவிட்டால் அதில் சுயவிருப்பம் கொண்டு மார்கத்தில் நல்லது தானே என்று சிலர் சில வணக்கத்தை அதிகப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அது மிகப்பெரிய வழிகேடு. அல்லாஹ்வுக்கு கோபத்தை உண்டாக்கும் என்பதை பின்வரும் வசனத்தில் அறிந்து கொள்ளலாம்.

“சில சொற்களை இவர்(முஹம்மது) நம் மீது இட்டுக்கட்டி இருந்தால் அவரை வலது கரத்தால் தண்டித்திருப்போம், பின்னர் அவர் நாடிநரம்பை துண்டித்திருப்போம். உங்களில் எவரும் அவனை(அல்லாஹ்வை) தடுப்பவர் அல்ல” (திருமறை 69-44-47) 

இஸ்லாமிய மார்க்க விவகாரத்தில் அல்லாஹ்வுடைய தூதருக்கே அதிகாரம் இல்லை என்று கடுமையான சொற்களால் அல்லாஹ் எச்சரிப்பதைப் பார்க்கிறோம்.

ஆனால் இன்றைய சமூகத்தில் முன்னோர்கள