சட்ட மேலவை தேர்தலுக்கு வாக்காளர் சேர்க்கும் பணி தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம்

28/10/2010 14:03

சட்ட மேலவை தேர்த லுக்கான வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தகுதியுடையவர் கள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் ஹரிகரன் தெரிவித்துள்ளார்.

சட்ட மேலவை

தமிழ்நாடு சட்ட மேலவை தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை தயாரிக்க இந்திய தேர்தல் ஆணையம் உத்தர விட்டுள்ளது. தொகுதி வரை யறையின்படி ராமநாதபுரம் மாவட்டம் தெற்கு மத்திய பட்டதாரிகள் மற்றும் ஆசிரி யர் தொகுதியிலும், ராமநாத புரம்- சிவகங்கை உள்ளாட்சி பிரதிநிதிகள் தொகுதியிலும் இடம் பெற்றுள்ளது.

பட்டதாரிகள் மற்றும் ஆசிரியர் தொகுதிக்கான வாக் காளர் பதிவு அலுவலராக மதுரை மாவட்ட வருவாய் அலுவலரும், உதவி அலுவலர் களாக ராமநாதபுரம், பரமக் குடி வருவாய் கோட்டாட் சியர்களும் நியமிக்கப்பட்டுள் ளனர். இதேபோல ராமநாத புரம்- சிவகங்கை உள் ளாட்சி மன்ற தொகுதியின் வாக்காளர் பதிவு அலுவல ராக ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவ லரும், உதவி அலுவ லர்க ளாக ராமநாத புரம், சிவகங்கை ஊரக வளர்ச்சி துறை நேர்முக உதவி யாளர்களும் நியமிக்கப்பட் டுள்ளனர்.

இந்த வாக்காளர் பட்டிய லில் பெயர் சேர்ப்பதற்கு பட் டதாரிகள் படிவம் 18-ஐயும், ஆசிரியர்கள் படிவம் 19-ஐ யும் பூர்த்தி செய்து அளிக்க வேண்டும். இதற்கான படி வங்களை மாவட்டத்தில் உள்ள 7 தாலுகா அலுவலகங் களிலும் தேர்தல் துணை தாசில்தார்களிடம் இருந்து பெற்றுக்கொள்ளலாம். பட் டதாரிகள் பெயர் பதிவுக்கு 1.11.2010க்கு முன்னர் இந்தி யாவில் ஏதேனும் ஒரு பல்க லைக்கழகத்தில் பட்டம் அல் லது அதற்கு இணை யான ஒரு தகுதி பெற்றி ருக்க வேண்டும். இவர் கள் விண் ணப்பத்தினை சமர்ப்பிக்கும் போது அசல் கல்வி சான்று களை பரிசீலனைக்கு காண் பித்து உடன் பெற்றுச் செல்ல லாம்.

ஆசிரியர் தொகுதி பெயர் பதிவுக்கு கடந்த ஆறு ஆண்டு களில் குறைந்த பட்சம் 3 ஆண்டுகள் இடைநிலை ஆசி ரியர் தகுதிக்கு குறையாத ஆசி ரியராக பணியாற்றி இருக்க வேண்டும். இவர்கள் விண் ணப்ப படிவத்துடன் கல்வி நிலைய தலைவரின் சான் றினை இணைக்க வேண்டும். பட்டதாரிகள் மற்றும் ஆசிரி யர்கள் தங்களது விண்ணப் பத்தினை வருகிற 30, 31 ஆகிய நாட்களில் அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் தேர்தல் பிரிவில் விண்ணப் பங்களை பெற்று திரும்ப ஒப் படைக்கலாம்.

இதேபோல உள்ளாட்சி பிரதிநிதிகள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்திட ஒன்றிய கவுன்சிலர் முதல் மாவட்ட ஊராட்சி தலை வர் வரை உள்ளவர்கள் தகுதி யுடையவர்கள். இவர்கள் விண்ணப்பம் 17-ஐ உள் ளாட்சி துறை நேர்முக உதயா ளரிடம் பெற்று அதனை பூர்த்தி செய்து திரும்ப அவரி டமே ஒப்படைக்க வேண் டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் வருகிற 6-ந் தேதிக்குள் சமர்ப் பிக்க வேண்டும். இந்த தக வலை கலெக்டர் ஹரிகரன் தெரிவித்தார்

தினத்தந்தி