சமீபகாலமாக நமதூரில் பெருகிவரும் குடிப்பழக்கம் ஒரு சமூகப் பார்வை

12/10/2010 16:00

நமதூரில் மட்டும் நமது காலத்தில் இளம் வயதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஏராளம். இயற்க்கையான மரணம் என்பது வேறு, ஆனால் தன்னைத்தானே தமது தீய செயல்களால் உயிர்விடும் அவலம் இன்னும் நமது இஸ்லாமிய சமுதாயத்தில் இருப்பதும், இளம் வயதில் கணவனை இழந்து தமது குழந்தைகளை வளர்த்து அவர்களின் கடமைகளை ஒரு பெண் செய்வது என்பதும் தொடர்கதையாகி வருகிறது. இதனால் ஏற்ப்படும் சமூக ஏற்றத் தாழ்வுகள் இழிச் செற்க்கள் என விபரீதங்களை பட்டியலிட்டு மாலாது.

ஒரு காலத்திலெல்லாம் குடிப்பவர்கள் சமூகத்தில் இழிவாக பார்க்கப்பட்டார்கள், தமது செயல்களால் மற்றவர்கள் தம்மை தரக்குறைவாக எண்ணிவிடக் கூடாது என்று மறைவாக குடித்துவந்தார்கள். ஆனால் இன்றோ, குடி சமுதாய அந்தஸ்து பெற்ற, தீமையே இல்லை எனற நிலைக்கு வந்துவிட்டதை பார்க்கிறோம். இதற்க்கு பெரியவர் சிறியவர் என்ற பாகுபாடு இல்லை. நமதூர் பள்ளி விளையாடடு மைதானங்கள் இரவு நேரங்களில் பாராக செயல்பட்டு வருகிறது. குடித்துவிட்டு அந்த பாட்டில்களைக் கூட எடுத்துப் போட முடியாமல் ஏன் உடைத்துக் கூட போட்டுவிட்டு செல்வதாக ஒரு நண்பர் நம்மிடம் கூறி வருத்தப்பட்டார். இதற்க்கு நம் அரசாங்கமே அங்கீகாரம் வழங்கி மதுக்கடைகளை நடத்தி வருவதும் ஒரு காரணம்.

இந்த குடிப்பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து எழுதாத பத்திரிக்கைகள் இல்லை, ஒளிபரப்பாத தொலைக்காட்சி சேனல்கள் இல்லை. குடிப்பவர்களுமே இதை நன்மை என்றோ உடல் நலத்தை காக்கக் கூடிய பாணம் என்றோ குடிப்பதில்லை. எல்லா தரப்பு மக்களும் குடிப்பழக்கம் தீங்கானது என்று ஏற்றுக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனாலும் அதை விட முடியவில்லை....

குடிப்பழக்கத்திற்கு ஆளானவர்களில் பெரும்பாளானோர் இளம் வயதில் விளையாட்டாக நண்பர்களுடன் சேர்ந்து செய்தவர்களே, ஆனால் மற்ற பழக்கத்தை நினைவு தெறிந்தவுடன் விட்டு விடுவது போல் இதை விட முடியவில்லை. காரணம் அந்த போதை நம் இரத்தத்தில் கலந்து நம்மை அந்த போதைக்கே அடிமையாக்கிவிடும். சிலர் சொல்ல கேட்டுள்ளேன்.... ”என்னால் குடிக்காமல் ஒரு நாள் கூட இருக்க முடியவில்லை” என்று சொல்வார்கள் அதெல்லாம் போதைக்கு அடிமையான முத்திய நிலையே யாகும் அது போக இப்போழுது கஞ்சா போன்ற போதை வஸ்துக்ளும் சாதாரணமாக கிடைக்கும் பெருட்களாகிவிட்டது.

போதைக்கு அடிமையாகி தன்னுடைய சுயநலத்தை மட்டும் கருத்தில் கொண்டு வாழ்ந்த இந்த குடிமக்களால் தம் குடும்பமே சீரழிந்து போய்க்கொண்டிருப்பது தெறியாமலே அவர்களது வாழ்நாளும் முடிந்து விடுகிறது. இதனால் பாதிக்கப்படும் பெண்களும் குழந்தைகளும் சிறுவயதிலேயே மண அழுத்தத்திற்கு ஆலாகி விடுகினறனர். தகப்பன் சரியில்லாமல் வளரும் குழந்தைகளும் நல்ல குழந்தைகளாக பெரும்பாலும் இருப்பதில்லை. ஒருவர் செய்யும் தவறால் ஒட்டு மொத்த சமுதாயமும் பாதிக்கப்படுகிறது.

மற்ற தவறுகளைச் செய்தவர்கள் கூட ஒரு கட்டத்தில் திருந்தி தனது வாழ்நாளின் கடைசிகாலங்களை கழித்து வருகிறார்கள் ஆனால் குடிப்பழக்கம் கொண்டிருப்பவர்களின் நிலை அவ்வாறு இல்லை மிகக் குறைந்தவர்ளே திருந்தியதாக தெறிகிறது. மேலும் சிலர் தமக்கு ஏற்பட்டுள்ள துன்பத்திற்க்கு தீர்வாக நினைத்தும் குடிக்கின்றனர். இப்படிப்பட்ட எண்ணம் கொண்டவர்கள் தாம் திருந்துவதை பற்றி எப்படி நினைத்துப் பார்க்க முடியும்?

இளைஞர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்!

தாம் ஏதோ அறியாமல் பழகிக் கொண்டுள்ள குடிபழக்கத்தை இப்போதே விட்டு விட முயற்சி செய்யுங்கள். காலம் கடந்து விட்டால் நீங்கள் நினைத்தாலும் நிறுத்துவது கடினமானதாக மாறிவிடும். அப்படி கடினமாக நினைத்தால் அதற்கொன்று இலவச கலந்தாய்வுகள் நடத்தப்படுகிறது. சிகிச்கை மையங்கள் இருக்கின்றன. அதில் சேர்ந்தாவது உங்கள் வாழ்க்கையை வழமாக்கிக் கொள்ளுங்கள்.

குடிப்பழக்கத்தால் திருமணத்திற்கு பிறகு பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியதிருக்கும், உதாரணமாக மனைவியுடன் சேர்ந்திருக்கம் போது உங்களது குடிப்பழக்கம் அவர்களை எரிச்சல் பட வைக்கும் இதனால் குடும்ப வாழ்க்கை சந்தோசம் இல்லாமல் போகலாம். உங்கள் குழந்தைக்கு சிறு சளி மற்றும் காய்ச்சலைக் கூட தாங்க மாட்டீர்கள் ஆனால் மிகப்பெரிய கேடு தரக்கூடிய மது அருந்தி விட்டும் சிகரட் புகைத்துவிட்டும் தூக்கி கொஞ்சுவீர்கள். உங்கள் பிஞ்சுக் குழந்தையின் உடலில் நஞ்சை விதைப்பீர்கள். ஆகவே இந்த மாபாதகச் செயலில் இருந்து தாமும் தவிர்ந்து தம் நண்பர்களையும் தவிர்ந்திருக்க வழியுறுத்துங்கள்.

அடிப்படைக் காரணம் என்ன?

இது போன்ற செயல்கள் இளைஞர்கள் மத்தியில் அதிகமாகி வருவதற்க்கான காரணங்களையும் நாம் சொல்ல கடமைப்பட்டுள்ளோம். முஸ்லிம்கள் மத்தியில் விழிப்புணர்வு இல்லாத காலகட்டத்தில் குறைந்த பட்சம் நமதூ மதரஸாவிலாவது குர்ஆன் ஓதுவது பற்றி படிச்சு இருப்போம், ஆனால் இன்று நம் சமுதாயம் விழிப்படைந்துள்ளது என்று சந்தோசப் பட்டுக்கொள்ள முடியாத நிலையில் இருக்கிறோம். ஏனென்றால் விழிப்புணர்வு என்பது எதிர்காலத்திற்கு தேவையான சம்பாத்தியத்தை தருவது மட்டுமே என்று பெற்றோரும் பிள்ளைகளும் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். இன்னும் சிலர் மர்கக்கல்வி வேறு உலகக்கல்வி வேறு என்று பிரித்து மார்கக்கல்வி பயின்றால் நம் பிள்ளைகளின் எதிர்காலம் நன்றாக இருக்காது அவன் ஆலிம்ஷா வேலைக்குத்தான் போக முடியும் என்று நினைத்து உலகக்கல்வியில் காட்டும் அக்கரை மார்க்கத்தை கற்றுக்கொள்வதில் காட்டுவது இல்லை.

கல்வி என்பது இரண்டுவகைப் படும்

1. முறையான கல்வி (Formal Education)

வரையறையுடன் கற்றுக் கொடுப்பது....

முறையான கல்வி என்பது பாடத்திட்டம் சார்ந்தது. பள்ளிகளில் கல்லுரிகளில் படிக்கும் கல்வி இவ்வகையைச் சார்ந்தது. அதில் பெரும்பாலனவை தேர்வுவரைக்கும் தான் பயன்படும். வாழ்க்கைக்கு தேவையான செய்திகள் மிகக் குறைந்ததாகவே இருக்கும். தொழில் சார்ந்த கல்வியை கற்பவற்களுக்கு அது தொழில் அடிப்படையில் மட்டுமே உதவியாக இருக்கும். இதை தேர்வு செய்வதில் மிகுந்த கவணம் செழுத்துகிறோம் காரணம் எதிர்காலம் நல்லா இருக்கனும், கைநிறைய சம்பாதிக்கனும் என்ற ஆசை.

பெரும்பாளான குற்றங்கள் இன்று படித்தவர்களால்தான் நிகழ்த்தப்படுகிறது. படித்த இளைஞர்களால் தான் இன்று சமுதாய சீரழிவுகள் நடந்து வருவது கண்கூடாக நாம் பார்த்து வருகிறோம். அவர்கள் படித்த படிப்பு அவர்களுக்கு ஒழுக்கத்தை, நாணயத்தை, கண்ணியத்தை கற்றுத் தந்ததாக சிலரின் நடவடிக்கைகளில் தெறியாது. ஆனால் பொதுவாக மக்கள் மத்தியில் படித்தவன் என்றால் அவன் நல்லவனாக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருப்பதைப் பார்க்கலாம்.

2. முறையற்ற கல்வி (Informal Education)

வரையறையில்லாமல் கற்றுக் கொள்வது....

இந்த முறையற்ற கல்வி முறை மிகவும் ஆபத்தானது. இது விசயத்தில் ஒருவன் சரியாக நடந்து கொண்டால் அவனது எதிர்காலம் நன்றாக இருக்கும். அப்படி என்ன இதற்க்கு முக்கியத்துவம் என்று கேட்கிறீர்களா?

முறையற்ற கல்வி முறை என்பது ஒருவன் தம் குழந்தை பருவத்தில் இருந்து தம் வீடு, தாய், தந்தை, உறவினர் மற்றும் நண்பர்கள் மூலமும் தம் சார்ந்துள்ள மத, நாடு மற்றும் கலாச்சாரத்தில் இருந்து தாமாக கற்றுக்கொள்வது. இதற்க்கு எவ்வித வரம்புகளும் இல்லை (இணையதளத்தைப் பயன்படுத்துவது போல) இத்த இடத்தில் தான் ஒரு மனிதன் நல்லவனாகவோ, தீயவனாகவோ மாற்றப்படுகிறான்.

ஒருவன் தம் தாய், தந்தையரிடமிருந்துதான் பொய்செல்ல கற்றுக்கொள்கிறான் என்றால் நம்புவீர்களா? ஆனால் அதுதான் உண்மை. பெரும்பாலான தாய் தந்தையர் தம் பிள்ளை இதை கற்றுக் கொண்டால் என்ன செய்வது என்று நினைப்பதே இல்லை. அதே போல் மகனிடம் சிகரெட் வாங்க கடைக்கு அனுப்புவது, நினைவு தெறிந்த பிள்ளை இருக்கும் போது குடித்துவிட்டு வீட்டுக்கு வருவது போன்றவை மிக முக்கியமானவை.

நண்பர்களை பொருத்தவரை ஒருவன் கெடுவதற்க்கும் நண்பர்கள்தான் காரணமாக இருக்கிறார்கள் ஒருவன் நல்லவனாவதற்க்கும் நண்பர்கள்தான் காரணமாக இருப்பதைப் பார்க்கிறோம். நட்பு முத்திப் போன கதையா இல்லாமல் மற்ற விசயங்களை எப்படி நம் வாழ்க்கைக்கு நன்மை பயக்குமா என்று பார்த்து தேர்வு செய்கிறோமோ அதே போல் நண்பர்களையும் தேர்வு செய்வது நம் கடமையாகும். நல்ல நட்பு கொள்ளளே சிறந்த நட்பு.

நாடு மற்றும் கலாச்சாரம் பற்றி சொன்னால் மேலை நாட்டு கலாச்சரமும் இந்திய கலாச்சாரத்திற்கும் உள்ள வேறுபாட்டையும் சல விசயங்களை நம்மால் ஏற்றுக் கொள்ள முடியாத நிலை உள்ளதையும் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

இறை நம்பிக்கைகள் - இந்த இடத்தில் தான் நாம் சற்று சிந்திக்க வேண்டும். இஸ்லாம் என்பது ஒரு மதமல்ல வாழ்க்கை நெறி. மனிதன் எப்படி வாழ வேண்டும் என்ற வழிகாட்டும் சித்தாந்தமே இஸ்லாம். இதில் இறைவன் நம் தவறுகளுக்காக நம்மை தண்டிப்பான் என்ற என்னமும் மறுமையில் நரகம் என்ற கொடும் தீயினை தவறிழைத்தவர்களுக்கு பரிசாக கொடுக்கப்படும் என்ற நம்பிக்கைதான் முஸ்லிமகளுக்கு இருக்க வேண்டிய தலையாய நம்பிக்கை. இதில் குறைவு ஏற்படும் போது நம்மையார் பார்க்கப் பொறா, நம்மை எவன் என்ன செய்யமுடியும் என்பது போன்ற என்னப் போக்குகள் மட்டுப்படுத்தப்படும். நம்மை இறைவன் பார்த்துக் கொண்டிருக்கிறான் நம்மை அவன் தண்டிப்பான் என்ற நம்பிக்கை ஒரு மனிதனை தவறில் இருந்து தடுக்கும் கேடையமாகும்.

இந்த நம்பிக்கை சரியாக இருந்தால் தான் வணக்கவழிபாடுகள் செய்ய ஒருவன் முன்வருவான். ஆகவே இஸ்லாத்தை அறிந்து கொள்வதில் பிள்ளைகளுக்கு ஆர்வம் காட்ட வேண்டும். ஒருவன் காலையில் விடிந்ததில் இருந்து அவன் இரவு படுக்கைக்கு செல்லும் வரை செய்யும் காரியங்களை இஸ்லாமிய வழிகாட்டுதலின் படி செய்து விட்டால் அவன் முஸ்லிமாக வாழ்ந்து விட முடியும்.

ஆனால் நாமோ இஸ்லாம் என்றால் என்ன வென்றே தெறியாத நிலையில் இருக்கும் அவலம் நம்மை மிகுந்த வேதனைப்படுத்துவதாகவே இருக்கிறது. நமது மதரஸாக்களின் நிலையோ சொல்ல முடியாத நிலை.... அல்லாஹ் நம் அனைவரையும் நோவழியில் கொண்டு செல்ல வேண்டும்.

நன்மையிலும் இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள் பாவத்திலும் வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள் அல்லாஹ் கடுமையாக தண்டிப்பவன்.(5:2)

இந்த கட்டுரையில் ஏதேனும் குறையிருந்தால் சுட்டிக் காட்டுங்கள், நிறையாக கருதினால் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யுங்கள்.

அன்புடன் அபூ அஸ்ஃபா, புதுவலசை