சர்வதேச தரத்துடன் மதுரை விமான நிலையம்

26/08/2010 13:13

மதுரை விமான நிலையம் சர்வதேச தரத்திற்கு உயர்த்தப்பட்டுள்ளது. நவீன வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்டுள்ள மதுரை விமான நிலையம் செப்டம்பர் 11 ஆம் தேதி திறக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

ரூ. 150 கோடி மதிப்பீட்டில் விரிவாக்கம் செய்யப்பட்டு நவீன முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போதைய ஓடுதளம் 12,500 அடி கொண்டதாக விஸ்தரிக்கப்பட்டுள்ளது. புதிய விமான நிலையத்தின் பரப்பளவு 610 ஏக்கராக பிரமாண்டமாக விரிவடைந்துள்ளது. எஸ்கலேட்டர், குளிர்சாதன வசதி, உலகத்தரம் வாய்ந்த முனைமம் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ராணுவப் பயன்பாட்டில் இருந்து, பின்னர் பயணிகள் விமான நிலையமாக மாற்றப்பட்டு  விமானப் போக்குவரத்து தொடங்கியது. சர்வதேச தரத்திற்கு உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்ததையடுத்து கடந்த 2008-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26-ஆம் தேதி விரிவாக்கம் மற்றும் சர்வதேச தரத்திலான அடிப்படைக் கட்டமைப்புப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது. (www.puduvalasai.in)

மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் பிரபுல் படேல் தலைமையில் முதல்வர் கருணாநிதி அடிக்கல் நாட்டி வைத்தார். தற்போது தரம் உயர்த்தப்பட்டு, சர்வதேச விமான நிலைய அந்தஸ்தைப் பெற்றுள்ளது.