சிறுபான்மை மொழிப் பாடங்களுக்குப் பாடநூல்கள், தேர்வுகள், சான்றிதழ்களில் மதிப்பெண்கள்:கலைஞர் உத்தரவு

15/12/2010 11:58

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநாட்டில் வெளியிடப்பட்ட அறிவிப்பினை நடைமுறைப்படுத்திடமுதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.


தமிழகத்தில் 2010-2011 கல்வியாண்டு முதல் சமச்சீர்க் கல்வி நடைமுறைப் படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, சிறுபான்மை மொழிச் சங்கங்களிலிருந்து சில கோரிக்கைகள் பெறப்பட்டதுடன், கடந்த 11.12.2010 அன்று சென்னையில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநாட்டிலும் அக்கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இக்கோரிக்கைகள் குறித்து பரிவுடன் பரிசீலனை செய்த  முதலமைச்சர் கருணாநிதி,  இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநாட்டில் உரையாற்றுகையில் பள்ளிக்கல்வித் துறையில் சமச்சீர்க் கல்வி பாடத் திட்டத்தில் சிறுபான்மை மொழிகள் கற்பித்தல் தொடர்பான கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கைகளை தமிழகஅரசு மேற்கொள்ளும் என்று அறிவித்தார்கள்.
 

 

அந்த அறிவிப்பினை நிறைவேற்றும்வகையில் பள்ளிகளுக்கான சமச்சீர்க் கல்வி பாடத் திட்டத்தில் பள்ளிகளில் தற்போதுள்ள உருது, கன்னடம், மலையாளம், தெலுங்கு, அரபிக் போன்ற சிறுபான்மை மொழிகளையும் கற்பித்திட வாரத்திற்கு நான்கு பாட வேளைகள் ஒதுக்கீடு செய்யப்படுமென்றும்,

மொழிப் பாடங்கள் மற்றும் சிறுபான்மைமொழி வழியில் கற்பிக்கப்படும் பாடங்களுக்கான பாடநூல்கள் தயாரிக்கப்படுமென்றும், சிறுபான்மை மொழிப் பாடங்களுக்கான தேர்வுகள் நடத்தப்படுமென்றும், மதிப்பெண் பட்டியலில் சிறுபான்மை மொழிப் பாடங்களுக்கான மதிப்பெண்கள் இடம் பெறும் என்றும் முதலமைச்சர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார்.

nakkheeran.in