சிறுபான்மையின மாணவ, மாணவிகள் கல்வி உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் அருண் ராய்

19/06/2011 09:10

சிறுபான்மையின மாணவ&மாணவிகள் கல்வி உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் அருண் ராய் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் சிறுபான்மையினராக கருதப்படும் கிறிஸ்தவ, இஸ்லாமிய, பவுத்த, சீக்கிய மற்றும் பாரசீக மதங்களை சார்ந்த அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு நடப்பு ஆண்டு (2011 -12) பள்ளி படிப்பு கல்வி உதவி தொகை வழங்க விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.


கல்வி உதவி தொகைகள் பெற முந்தைய ஆண்டின் இறுதி தேர்வில் 50 சதவீ தத்துக்கு குறையாமல் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். 1 முதல் 10 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கப்படுகிறது. பெற்றோர் அல்லது பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்கு மிகாமல் இருக்கவேண்டும். கல்வி உதவி தொகை வேண்டி பூர்த்தி செய்யப்பட்ட புதுப்பித்தல் விண்ணப்பங்களை 4.7.2011க்குள்ளும், புதிய விண்ணப்பங்களை 11.7.2011க்குள்ளும் கல்வி நிலையங்களில் மாணவ-மாணவிகள் அளிக்க வேண்டும. இந்த கல்வி உதவி தொகை பெறுவதற்கு மாணவ-மாணவிகள் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் சேமிப்பு கணக்கு வைத்திருக்க வேண்டும்.


கல்வி நிலையங்கள் மாணவ-மாணவிகளிடம் இருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களை சரிபார்த்து உரிய படிவத்தில் புதிய உதவி பெறுவதற்கான கேட்பு பட்டியலை 20.7.11க்குள்ளும், புதுப்பித்தலுக்கான கேட்பு பட்டியலை 15.7.11க்குள்ளும்
மாவட்ட பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும். எனவே சிறுபான்மை இனத்தை சேர்ந்த மாணவ-மாணவிகள் இந்த கல்வி உதவி தொகை பெற உரிய காலத்தில் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கலெக்டர் அருண்ராய் கேட்டுக்கொண்டுள்ளார்.
 
நன்றி;தினத்தந்தி (from TMB)