செயற்கை ”மூளை செல்” தயாரிப்பு

27/04/2011 11:00

செயற்கை ”மூளை செல்” தயாரிப்புநம் உடலில் ஏற்படும் செயல்பாடுகளை மூளைக்கும், மற்ற நரம்புகளுக்கும் நரம்பணுவில் உள்ள “சினார்பஸ்” என்ற மூளை செல்கள் செய்து வருகின்றன. அவற்றை செயற்கை முறையில் விஞ்ஞானிகள் தயாரித்துள்ளனர்.

 
அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் உள்ள விடர்பி என்ஜினீயரிங் கல்லூரி பேராசிரியர்கள் அவிஸ்பார்கர், சாங்கு ஷோஷ் ஆகியோர் தலைமையிலான குழுவினர் இது குறித்த ஆய்வை மேற்கொண்டனர்.
 
மூளை செயல்பாட்டில் குறைபாடு உள்ளவர்களின் பிரச்சினையை தீர்க்க இந்த செயற்கை மூளை செல்லை தயாரித்தனர். பென்சில் முனையை விட 10 லட்சம் மடங்கு மிக சிறிய அளவிலான கார்பன் மூலக்கூறு மூலம் கார்பன் நானோ குழாய்களை உருவாக்கினர்.
 
அந்த நானோ குழாய்கள் மின் அதிர்வுகளை ஏற்படுத்தும் சர்கியூட் ஆக பயன்படுத்தப்பட்டது. அவற்றின் மூலம் மூளைக்கு தகவல்கள் பரிமாற்றம் செய்யப்பட்டதாக தங்கள் அறிக்கையில் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

maalai malar