ஜமாஅத் பொதுக்கூட்டம் - நோன்புக் கஞ்சிக்கு ரூபாய் 6800 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது

01/07/2011 08:21

நமதூர் முஸ்லிம் தர்ம பரிபாலன சபை பொதுக்கூட்டம் கடந்த புதன் கிழமை நடைபெற்றது. அதில் பல்வேறு பிரச்சனைகள் சம்மந்தமாகவும் நோன்புக் கஞ்சி சம்மந்தமாகவும் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன அதன் விபரம் வருமாறு....

 

1. நமதூரில் நோன்பு கஞ்ஜி காச்சுவது சம்மந்தமாக இந்த வருடம் செலவீனங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது பின் ஒரு கஞ்சிக்கு செலவு  6800 ருபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.     

 

2. நமதூரில் +1 (பதினோராம் வகுப்பு) புதிதாக வர இருப்பதாலும்,  மேலும் பள்ளி கட்டிடங்கள் கட்ட வேண்டி இருப்பதாலும் அதற்கான நிதி பற்றாக்குறையை சரிசெய்ய ஊரில்  ஒரு குடும்பத்திற்கு வெளிநாட்டில் சம்பாதிப்பவராக இருந்தால் ரூ 3000 எனவும் உள்நாட்டில் சம்பாதிப்பவராக இருந்தால் ரூ 2000 வசூலிப்பதாக  தீர்மானிக்கப்பட்டுள்ளது.  கூட்டத்தில் TNTJ PVS சார்பில் ஜமாஅத் பள்ளிக்கூடம் கட்டுவதற்காக  5000 ரூபாய் தருவதாக வாக்களிக்கப்பட்டுள்ளது.

 

3. சகோ. ஜபருல்லாஹ் தம்மீது கடந்த காலங்களில் விதிக்கப்பட்ட ரூ 15000 அபதாரத்தை தள்ளுபடி செய்ய வேண்டி சகோதரர் முஹம்மது அலி அவர்களுக்கு ஒரு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருந்தார் அதை நமது இணையத்தில் அப்போதே நமதூர் முன்னால் ஜமாஅத் செயலாளருக்கு வக்கீல் நோட்டீஸ் என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டு இருந்தோம். அதற்கு சகோதரர் முஹம்மது அலி அவர்கள் அனுப்பிய பதில் நோட்டீசில், தான் ஜமாஅத்தில் நிர்வாகப் பொறுப்பில் இருந்தேன் என்பதைத் தவிர தமக்கு தனிப்பட்ட முறையில் எந்த சம்மந்தமும் இல்லை என குறிப்பிட்டிருந்தார் அது ஜமாஅத்திற்கு எதிராக மன நஷ்ட வழக்காக மாற்றப்பட்டுள்ளது. எனவே இந்த வழக்கை ஜமாஅத் எதிர் கொண்டு அதற்காக ஆகும் அனைத்து செலவீனங்களையும் சகோ. ஜபருல்லா அவர்களின் பெயரிலேயே எழுதிவைப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.      

நன்றி சகோ. சமீனுல்லாஹ்