ஜாமியா மஸ்ஜித் வராண்டாக்கள் டைல்ஸ் தளமாக மாற்றம்

04/10/2010 09:50

ஜாமியா மஸஜித் வராண்டாவில் சிமென்ட் தளம் போடப்பட்டு இருந்தது. அதில் வெடிப்பு விழுந்து சீரமைக்கவேண்டிய கட்டாயம் இல்லாவிட்டாலும் பலுதடைந்து இருந்தது. இந்நிலையில் வசநத் கன்ஸ்ட்ரக்சன் நிறுவனம் தாசின் அறக்கட்டளை சார்பில் நமதூர் தொடக்கப்பள்ளி கட்டிடத்தை கட்டி வருகிறது. தாசின் அறக்கட்டளை பொருப்பாளர் எம்.கே. முஹம்மது அலி அவர்களின் வேண்டுகோளுக்கு இனங்க தாசின் அறக்கட்டளைக்காக ஏதேனும் செய்து தருவதாக வசந்த் கன்ஸ்ட்ரக்சன் உரிமையாளர் ராஜேஸ் கண்ணா உறுதியளித்து இருந்தார். அதன்படி நமதூர் பள்ளி மைதானத்தின் பேஸ்கட்பால் மைதானம் தளம் போட்டுத்தர கோரிக்கை வைக்கப்பட்டது. அதன் மதிப்பு கூடுதலாக வரும் என்பதால் ரூபாய் 3 இலட்சத்து 40 ஆயிரம் மதிப்பில் ஜாமிய பள்ளியின் தெற்கு, மேற்கு மற்றும் வடக்கு வராண்டாக்கள் எஞ்சியிருந்த மணல் பகுதி உட்பட டைல்ஸ் போடப்பட்டுள்ளது.

நன்றி சகோதரர் முஹம்மது இம்தியாஸ்