ஜூலையில் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க ராணுவம் வெளியேறும்:ஒபாமா

18/12/2010 23:22

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் தலிபான் மற்றும் அல்கொய்தா தீவிரவாதிகள் பதுங்கியுள்ளனர். பாகிஸ்தானின் வட மேற்கு பகுதியில் உள்ள மலைப் பகுதி தீவிரவாதிகளின் பாதுகாப்பான சொர்க்க பூமியாக திகழ்கிறது.
 
எனவே, தீவிரவாதிகளை ஒழிக்கும் நடவடிக்கையில் அமெரிக்கா தலைமையிலான பன்னாட்டு படைகள் ஈடுபட்டுள்ளன. ஆப்கானிஸ்தானில் கடந்த 2001-ம் ஆண்டு முதல் முகாமிட்டு அவர்களை அடக்கி ஒடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். தற்போது அதில் பெருமளவு வெற்றியும் பெற்றுள்ளனர்.

 

இதை தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க ராணுவத்தை படிப்படியாக வாபஸ் பெறுவது என அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இந்த நிலையில் அதிபர் பராக் ஒபாமாவின் அறிக்கையை அமெரிக்க வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ளது.
 
அதில், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் அல்கொய்தா தீவிரவாதிகள் வேட்டையாடப்பட்டு வருதை தொடர்ந்து அவர்களின் ஆதிக்கம் குறைந்துள்ளது. அவர்கள் தோற்கடிக் கப்பட்டுள்ளனர்.
 
எனவே, இனி ஆப்கானிஸ்தான் பாதுகாப்பாக இருக்கும் நிலை உருவாகியுள்ளது. ஆகவே அடுத்த ஆண்டு (2011) தொடக்கத்தில் இருந்தே அமெரிக்க ராணு வத்தை அங்கிருந்து வாபஸ் பெறுவது என லிஸ்பனில் நடந்த பன்னாட்டு மாநாட்டில் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுள்ளது.
 
அதன்படி வருகிற ஜூலை மாதம் முதல் அங்கிருந்து அமெரிக்க ராணுவம் வெளியேற தொடங்கும். 2014-ம் ஆண்டுக்குள் முழுவதும் வாபஸ் பெறப்பட்டு விடும். படைகள் வாபஸ் பெறப்பட்டாலும் ஆப்கானிஸ்தானில் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு நடவடிக்கையில் நட்பு நாடு என்ற ரீதியில் அமெரிக்கா தொடர்ந்து உதவியாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

nakkheeran.in