தமிழக சட்டமன்றத் தேர்தல் 2011 - ஜெ முதல்வராகிறார்

14/05/2011 13:55

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் கடந்த மாதம் 13ம் தேதி நடைபெற்றது அதன் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. துவக்கம் முதலே அதிமுக அணி முன்னிலை பெற்று வந்தது. இறுதியில் அதிகப் பெரும்பான்மையுடன் அதிமுக கூட்டணி வெற்றிவகை சூடியது. 234 தொகுதிகளில் அதிமுக கூட்டணி 203 தொகுதிகளைக் கைப்பற்றியது.

அதிமுக 147

தேமுதிக 29

சிபிஎம் 10

சிபிஐ 9

மனிதநேய மக்கள் கட்சி 2
புதிய தமிழகம் 2
சமத்துவ மக்கள் கட்சி 2

பார்வர்டுபிளாக் 1

இந்திய குடியரசு கட்சி 1

கொங்கு இளைஞர் பேரவை 1

 

இந்தத் தேர்தலில் ஊழல், குடும்ப அரசியல், மின்சாரத் தட்டுப்பாடு, இலங்கை தமிழர் பிரச்சனை மற்றும் விலைவாசி உயர்வு ஆகியவை முக்கிய பிரச்சனையாக அதிமுக கூட்டணியால் பிரச்சாரம் செய்யப்பட்டது. யாரும் எதிர்பார்க்காத வகையில் தனிப்பெரும் கட்சியாக அதிமுக ஆட்சியமைக்க உள்ளது. திமுக வெற்றி பெற்ற தொகுதியில் அவர்கள் பெற்ற வாக்கு வித்தியாசத்தையும் அதிமுகவும் அதன் கூட்டணிக்கட்சிகளும் பெற்ற வாக்கு வித்தியாசத்தையும் பார்த்தால் மக்களால் திமுக அரசு தூக்கி எறியப்பட்டுள்ளது என்றே சொல்லாம். மு.க. ஸ்டாலினே இழுபரியில் 2 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார். அழகிரியின் கோட்டையான மதுரையில் 10க்கு 10ம் போச்சு.

 

திமுக கூட்டணி யில்

திமுக 23

காங்கிரஸ் 5

பாமக 3

விடுதலை சிறுத்தைகள் 0

முஸ்லீம் லீக் 0

தனியாக 23 சீட்டுக்களையும் கூட்டணியாக 31 சீட்டுக்களையும் மட்டுமே பெற்றுள்ள திமுக இந்த தேர்தலில் பிரதான எதிர்கட்சி என்ற அந்தஸ்தைக் கூட பெறவில்லை. 29 சீட்டுக்களைப் பெற்ற தேமுதிக எதிர்கட்சி அந்தஸ்தைப் பெறுகிறது. இதே நிலையை கடந்த 1996 ம் ஆண்டு ஜெ ஊழலுக்குப் பின் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக சந்தித்தது அப்போது தமிழ்மாநில காங்கிரஸ் பிரதான எதிர்கட்சியாக செயல்பட்டது நினைவிருக்கலாம். இந்நிலையில் காங்கிரஸ் கமிட்டி தலைவர் சர்சைக்குறிய தங்கபாலு தனது பதவியிலிருந்து விளகியுள்ளார்.

 

அது போல் புதுச்சேரியிலும் அதிமுக கூட்டணியே ஆட்சியமைக்கிறது. தேர்தலுக்கு 2 மாதங்களுக்கு முன் காங்கிரஸில் இருந்து வெளியேறிய புதுவை முன்னால் முதல்வர் ரங்கசாமி ஆரம்பித்த என் ஆர் காங்கிரஸ் 30க்கு 15 சீட்டுக்களை பெற்று தனிப்பெரும்பான்மையில் ஆட்சியமைக்கிறது.

 

கேரளாவில் கம்யூனிஸ்டுகளிடமிருந்து காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. அஸாமில் காங்கிரஸ் ஆட்சியை தக்கவைத்துள்ளது. 34 வருட கம்யூனிஸ்டுகளின் ஆட்சிக்கு மேற்கு வங்க மக்கள் முற்றுப்புள்ளி வைத்தள்ளனர் அங்கு மத்திய இரயில்வே துறை அமைச்சராக இருந்து மம்தா பானர்ஜி தலைமையிலான திரினாமுல் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கிறது. முன்னால் முதலமைச்சர் புத்ததேவ் பட்டாசாரியா 14000 வாக்கு வித்தியாசத்தில் தோற்றுப் போனார்.