தாசின் அரக்கட்டளை சார்பில் மாணவர்களுக்கு பரிசு

24/07/2010 12:47

 24-07-2010

அரபி ஒலியுல்லா உயர்நிலைப் பள்ளியில் இந்த ஆண்டு (2009-2010) 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடத்தை பிடித்த மாணவிகளுக்கு தாசின் அரக்கட்டளை சார்பில் நேற்று பரிசளிப்பு விழா நடத்தப்பட்டது.

முதல் மதிப்பெண் 484 பெற்ற மாணவி எஸ் வசீமாவுக்கு ரூ. 3,000

இரண்டாம் மதிபபெண் 467 பெற்ற மாணவி ஜீ. வினிதாவுக்கு ரூ. 2,000

மூன்றாம் மதிப்பெண் 465 பெற்ற மாணவி எஸ். ஜுனைதாவுக்கு ரூ. 1,000 மும் கல்வி உதவித் தெகையாக வழங்கப்பட்டது.

பின் ஆசிரியர்களுக்கு ஊக்கத் தெகையும் வழங்கப் பட்டது.

 

நமதூரைச் சார்ந்த 12 ஆம் வகுப்பு முடித்து மேல் படிப்புக்கு செல்ல உள்ள மாணவி பாத்திம் நுஸ்ராவுக்கு கல்வி உதவித் தெகையாக ரூபாய் 15,000 வழங்கப்பட்டது.

இந்நிகழ்சியில் தாசின் அரக்கட்டளை பொருப்பாளர் சகோ. முஹம்மது அலி அவர்கள் உதவித் தெகைகளை வழங்கினார்.

பள்ளிகளின் தாளாலர் சகோ. லியாக்கத் அலி அவர்கள் வரவேற்புரையாற்றினர், சகோ. இபுறாம்ஷா, சகோ.முஹம்மது மைதீன், சகோ.தையுப்கான், சகோ.அப்துல் ஹமீது, உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.