தூக்கமின்மையால் ஏற்படும் விளைவுகள்

19/05/2011 09:08

இரவு நேர தூக்கம் என்பது ஒவ்வொறு மனிதனுக்கும் மிக முக்கியமான தேவையாக இருக்கிறது. மாறிவரும் இரவுநேர கலாச்சாரத்தாலும், கணிணி உபயோகிப்பது போன்ற காரணங்களாலும் பெரும்பாளாகவர்கள் இரவில் சரியாக தூங்குவதில்லை.

 

Insomniaஆனால் அல்லாஹ் தனது திருமறையில் கூறுகிறான்

திருமறைக் குர்ஆன் 25-47ல் அவனே (அல்லாஹ்வே) இரவை உங்களுக்கு ஆடையாகவும், உறக்கத்தை உங்களுக்கு ஓய்வாகவும் பகலை நீங்கள் இயங்குவதற்காகவும் (உழைப்பதற்கும்) அமைத்தான்.

 

நாம் பகலில் உழைத்துவிட்டு இரவில் ஓய்வெடுக்காமல் இருந்தால் நமது உடலில் சக்தி குறையும், உடலில் பல்வேறு ரசாயன மாற்றம் ஏற்படும் மற்றும் உடல் பருமன் ஏற்படும் என்று தற்போதைய ஆய்வுகள் தெறிவிக்கின்றன.

 

ஐரோப்பிய நாட்டு ஆய்வு ஒன்று தெறிவிக்கிறது இரவில் தூங்காமல் இருப்பது அடுத்த நாளில் மனிதனுக்கு சோம்பேரித்தனத்தை தருவதோடு மட்டுமல்லாமல் உடலில வளர்சிதை மாற்றத்தை குறைக்கிறது இதனால் உடலில் சக்தி குறைகிறது அதே நேரத்தில் பசியை அதிகரிக்கிறது பசி அதிகரிப்பதன் காரணமாக உடல் பருமன் அடைகிறது. மேலும் உடலில் உள்ள கலோரியை எறித்து சக்தியாக மாற்றும் அளவையும் குறைக்கிறது. 

 

அமெரிக்காவைச்சேர்ந்த American Journal of Clinical Nutrition என்ற நிறுவனமும் இந்த தூக்கமின்மை பற்றிய ஆய்வை நடத்தியது அவர்களும் மனிதனுக்கு ஒரு நாளைக்கு 7 முதல் 9 மணி நேரம் தூக்கம் அவசியம் என பரிந்துரைத்துள்ளது.

 

சுவீடன் நாட்டு Christian Benedict of Uppsala University என்ற பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், ஒரு ஆரோக்கியமான மனிதனின் உடலில் உழைப்பு விகிதத்தை குறைப்பதற்காகவும் உடலுக்குத் தேவையான சக்தியை பெற்றுக் கொள்ளவும் இரவு நேரத்தில் தூக்கம் அவசியம். பகலில் மனிதனின் உழைப்புத்தான் இரவு நேர தூக்கத்தை ஏற்படுத்துகிறது.

 

ஒரு நாள் இரவு தூக்கத்தை இழந்தாலும் அது உடலில் பல வளர்சதை மாற்றங்களை ஏற்படுத்துகிறது, இதனால் சுவாசம் மற்றும் உணவு செரிமானத்துக்குத் தேவைாயன சரியான சக்தி கிடைப்பதில்லை. ஒரு ஆரோக்யமான இளைஞன் இரவு நேரத் தூக்கத்தை விட்டால் அது காலை நேர இரத்தத்தில் குளுக்கோஸ் (இனிப்பு) அதிகரிக்கிறது, பசியை அதிகப்படுத்தும் ஹார்மோன் கெரெலின் மற்றும் மன அழுத்தத்தை அதிகரிக்கும் கார்டிசோல் என்ற ஹார்மோனும் இரத்தத்தில் அதிகரிக்கிறது. அதனால் பசி அதிகமாக எடுக்கிறது. என்னதான் பசித்தலும் ஒரு நாளில் ஒரு மனிதன் எடுத்துக்கொள்ளும் உணவின் அளவை அது அதிகப்படுத்தது. அதே நேரத்தில் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் உணவு செரிமானம் குறையும் போதும், செரித்த உணவு சக்தியாக மாற்றும் வேலை உடலில் குறையும் போதும் உடல் பருமன் அதிகரிக்கிறது. உடலில் சக்தி (Energy)  குறைகிறது என அந்த ஆய்வரிக்கை தெறிவிக்கிறது.

 

நன்றி ஹிந்துஸ்தான் டைம்ஸ்