தேசிய அடையாள அட்டை சரிபார்க்கும் பணி சம்மந்தமான அறிவிப்பு

20/10/2010 15:06

நமதூரில் கடந்த சிலநாட்களாக தேசிய அடையாள அட்டைக்காக சேகரிக்கப்பட்ட தகவல்களை சரிபார்க்கும் பணி நடைபெற்று வருகிறது. பல்வேறு குளறுபடிகள் நிறைந்த இந்த பணியில் நம் மக்கள் அதிக கவனம் செலுத்தி எந்த தவறும் நடைபெறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக பிறந்த தேதி, தகப்பனார் பெயர், வீட்டு முகவரி போனற அடிப்படை விபரங்கள் சரியாக இருக்க வேண்டும். முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அரசு தேசிய அடையாள அட்டையை முக்கிய ஆவணமாக கொள்ள உள்ளதால் நாம் தான் அதை சரி செய்து கொள்ள வேண்டும்.

1. முஸ்லிம்களின் பெயர்களை அங்குள்ள நண்பர்களுக்கு சரியாக பதிவு செய்யத் தெறியவில்லை.

2. பெண்கள் அதிகமாக குடும்ப தலைவர் பொருப்பில் இருப்பதால் அவர்களுக்கு போதிய அறிவு இல்லாமல் வேலை முடிந்தால் போதும் என செல்கின்றனர்.

3. மேலும் அந்த தகவல்களை பதிவு செய்ய பயன்படும் மென்பொருள் (Software) கோலாறு காரணமாக குடும்ப தலைவர் என்று குறிப்பிட்ட ஆணின் கீழ் உள்ள அனைத்து குடும்ப உறுப்பினர்களையும் அவரது பிள்ளைகாளகவே பதியப்பட்டு உள்ளது. குறிப்பாக மருமக்கள் அனைவரும் மாமனாரின் பிள்ளைகள் என்று பதியப்பட்டுள்ளதாக தெறிகிறது. எனவே கவனமாக மறு பதிவு செய்யும் போது குறிப்பிட வேண்டும்.

4. ஏற்கனவே அனைவருக்கும் புகைப்படம் எடுக்கப் பட்டது, அதில் பாதிக்கும் மேற்பட்டவர்களின் புகைப்படங்கள் சரியான வெளிச்சம் இல்லாததால் நிராகரிக்கப்பட்டுள்ளது. எனவே மீண்டும் ஒருவாரகாலத்தில் போட்டோ எடுக்கும் பணி துவங்குன் என தெறிகிறது.

எனவே பொதுமக்கள் விளிப்புடன் இருந்து சரியான தகவல்களை அளிக்குமாளு கேட்டுக் கொள்ளப் படுகிறீர்கள்.