தேசிய அடையாள அட்டை பெயர் சரிபார்க்கும் பணி நடைபெற்று வருகிறது

18/10/2010 10:15

இந்தியாவின் தேசிய அடையாள அட்டை திட்டத்தை கடலோர மாவட்டங்களில் கடந்த 2009 செப்டம்பர் மாதம் அறிமுகப்படுத்தி ஊராட்சி வாரியாக பொதுமக்களின் புகைப்படம் மற்றும் கைரேகைகள் கணினி தொழில் நுட்பத்துடன் பதிவு செய்யப்பட்டது நினைவிருக்கலாம் (முந்திய செய்தியைக் காண இந்தியாவில் புதிய அடையாள அட்டை - புதுவலசை ஊராட்சி ) அந்த தேசிய அடையாள அட்டையின் பணிகள் தற்ப்போது முடிவடையும் நிலையில் உள்ளதால் ஊராட்சி தோறும் பெயர் மற்றும் முகவரி சரிபார்க்கும் வேலையை துவங்கியுள்ளது அரசாங்கம்.

அதன்படி நமதூரிலும் பெயர் சரிபார்க்கும் பணி கடந்த 3 நாட்களாக நடைபெற்று வருகிறது. உங்களின் அடையாள அட்டை அல்லது ரேசன்கார்டு, அல்லது பாஸ்போர்ட் போன்ற உங்களின் பெயர் உள்ள அடையாளங்களைக் கொண்டு அதன்படி தேசிய அடையாள அட்டைக்கான பெயர் பதியப்பட்டுள்ளதா என்பதை சரிபார்த்துக் கொள்ளவேண்டுமாய் கேட்டுக்கொள்ளப் படுகிறீர்கள்.